பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏盛8 வாழ்க்கைச் சுவடுகள் 'இங்கே நீங்கள் சும்மா இருப்பதை விட சென்னைக்குப் போய் இந்தப் புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம். உங்கள் எண்ணங்களும் எழுத்தும் எங்கும் பரவ புதிய பத்திரிகை உதவக்கூடும்' என்று துறையூர் அச்சுத்தொழிலாள நண்பர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். எனக்கும் அது சரி என்றே பட்டது. நான் எந்த அரசியல் கட்சியையோ, இயக்கத்தையோ சார்ந்திருக்கவில்லை. என் இஷ்டம்போல் எனக்குச் சரி என்று பட்டதை அழுத்தமாகப் பதிவு செய்கிறேன். கோரநாதன் எழுத்துக்கள் சுதந்திரமானவையாகத்தான் இருக்கும் என்று கூறினேன். எம்.கே.டி. சுப்பிரமணியன் என் கருத்தை ஏற்றுக் கொண்டார். முதலில் சென்னைக்கு வந்து சேருங்கள் என அவசரப்படுத்தினார். 1947 அக்டோபர் இறுதியில் நான் துறையூரை விடுத்து சென்னைக்குப் புறப்பட்டேன். துறையூர் நண்பர்கள் பிரிவுபசாரக்கூட்டம், விருந்து எல்லாம் நடத்தி உற்சாகப்படுத்தி வழிஅனுப்பி வைத்தார்கள். துறையூரில் நான் வசித்த வருடங்கள் மனோகரமான காலமாக அமைந்திருந்தது. என் வளர்ச்சிக்குத் துணை புரிந்த இனிய பருவமாகவும் அது இருந்தது. கிராம ஊழியன் நடந்து கொண்டிருந்த காலத்தில், இதழியல் துறையில் மிக முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இதழியல் வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய மிகத் தனித்தன்மை உடைய ஒரு நிகழ்ச்சி அது. லட்சுமிகாந்தன் என்றொருவர் தமது எழுத்து மூலமும், தாம் கொடுக்கிற செய்திகள் மூலமும் பரபரப்பு ஏற்படுத்திப் பெயர் பெற ஆசைப்பட்டார். அதன் மூலம் பணம் பண்ணுவதும் அவருடைய நோக்கமாக இருந்திருக்கலாம். அந்தக் காலத்தில், நடந்துகொண்டிருந்த ஏதாவது ஒரு பத்திரிகையை வாங்கி, - தமது நோக்கிற்கும் போக்கிற்கும் தக்கபடி அதைப் புதுப்பித்து வெளியிடத் திட்டமிட்டுச் சில பத்திரிகையாளர்களை அணுக முயன்றார். நின்று போயிருந்த 'சினிமா தூது என்ற பத்திரிகை அவருக்குக் கிடைத்தது. சினிமா தூதுவில், சினிமா நடிகர்கள் நடிகைகள், படத்தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாத் தொழில் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்துவதாக அறிவித்து லட்சுமிகாந்தன் ஒளிவுமறைவில்லாமல் திரைமறைவு விஷயங்கள் பலவற்றையும் எழுதினார். வம்புகள், வதந்திகள், அவதூறுகள் தாராளமாக வழங்கப்பட்டன. பத்திரிகைக்குப் பரபரப்பான விற்பனை கிட்டியது. ஆனால் விரைவிலேயே பத்திரிகை தடை செய்யப்பட்டது. லட்சுமிகாந்தன் ஒய்ந்துவிடவில்லை. இந்து நேசன்' என்ற வேறொரு பத்திரிகையை வாங்கி, தனது போக்கில் எழுதி வெளியிட்டார். புகழ் பெற்று விளங்கிய சினிமா நட்சத்திரங்கள், நடிகைகள், படாதிபதிகள், பிரபலஸ்தர்களின் வாழ்க்கை அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி விறுவிறுப்பாகத் தகவல்களும்