பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 323 அவ்வகையில் வளர்ந்து கொண்டிருந்த சிறிய நிறுவனம் 'எபிஷியன்ட் பப்ளிஸிட்டீஸ் பிரைவேட் லிமிட்டெட் இதை நிர்வகித்த சகோதரர்களில் இரண்டுபேர் ஆழ்ந்த இலக்கிய ரசிகர்களாகவும் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் மிக்கவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் ராமச்சந்திரன், கணபதி என்ற பெயருடையவர்கள். விளம்பரங்களுக்கான படங்கள், டிசைன்கள் தயாரிப்பதற்காக அவர்கள் அடிக்கடி வேந்தனை நாடி வருவார்கள். ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கி விஷயங்கள் எழுதுவதற்காக என் அண்ணாவின் உதவியைப் பெறுவார்கள். இருவரில் கணபதி ஐயர் எல்லோரிடமும் இயல்பாகப் பேசிப் பழகி இனிமையாகப் பொழுதுபோக்குவார். எங்களிடம் புத்தகங்கள் பற்றிச் சுவாரசியமாக உரையாடுவார். நான் சென்னைக்கு வந்ததும், எம்.கே.டி சுப்பிரமணியன் என்னுடன் தொடர்புகொண்டார். அவர் நடத்தத் திட்டமிட்ட பத்திரிகையின் பெயர் 'தீப்பொறி மாதம் இருமுறை வெளிவரும் இதழ் ஆசிரியர்-கோரநாதன் என்று விளம்பரங்கள் செய்யப்பட்டன. - பத்திரிகை வெளிவந்தது. சூடான, சிந்தனையைத் தூண்டும் விஷயங்கள் நிறைந்திருந்தன. கோரநாதன் எழுதியவை பல. வேறு சிலர் எழுதிய கட்டுரைகளும் உண்டு. அந்தக் காலகட்டத்தில், பத்திரிகை தொடங்கி நடத்த வேண்டும் என்ற உந்துதல் மிகப்பலருக்கு ஏற்பட்டிருந்தது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பேச்சாளரும் தனித்தனியே பத்திரிகை ஆரம்பித்து நடத்தினார்கள். எல்லாம் வெகுகாலம் நீடித்து உயிரோடிருந்தன என்று சொல்வதற்கில்லை. எம்.கே.டி சுப்பிரமணியன் ஆரம்பித்த தீப்பொறியும் நெடுங்காலம் சுடர் பரப்பவில்லை. அவர் எதிர்ப்பார்த்தபடி அவருடைய குடும்பத்தினர் அவருக்குப் பண உதவி பண்ண மனம் கொள்ளவில்லை. அவர் எப்படியோ முயன்று சிரமப்பட்டுப் பணம் புரட்டிச் சிறிது காலம் பத்திரிகையைக் கொண்டுவந்தார். பத்து இதழ்களுக்கு மேல் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தீப்பொறி பத்தாவது இதழுடன் அணைந்து அடங்கிவிட்டது. இதனால் எனக்கு நஷ்டம் எதுவுமில்லை. ஒரு விளையாட்டு மாதிரித் தோன்றியது இம் முயற்சி அது நின்றுபோனதும் நல்லதுதான் என்ற நினைப்பே எனக்கு எழுந்தது. எம். சூரி என்பவர் அடிக்கடி சினிமா உலகம் அலுவலகத்துக்கு வருவார். அவர் சிறு அச்சகம் ஒன்று வைத்திருந்தார். சிறுசிறு புத்தகங்கள் வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வந்தார். என் அண்ணா அசோகன் தமிழாக்கிய கொகோல் ரஷ்ய எழுத்தாளர் கதை ஒன்றை 'அன்று இரவு எனும் சிறுபுத்தகமாகப் பிரசுரம் செய்திருந்தார்.