பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ፲3፲ வெலிங்டன், காசினோ, கெயிட்டி, எல்பின்ஸ்டன் என்று. ஆங்கிலம், இந்தி, தமிழ்ப் படங்கள் ஓடின. நல்ல படம் எனத் தோன்றிய படங்கள் பலவற்றையுைம் இப்படிப் பார்த்து மகிழ்ந்தோம். பகல் வேளைகளில் பலரகமானவர்களும் வந்தார்கள். பத்திரிகையாளர்கள், புத்தகம் வெளியிடுவோர், எழுத்தாளர்களும் வந்தார்கள். வேந்தனை, அல்லது சினிமா உலகம் ஆசிரியர் பி.எஸ். செட்டியாரைப் பார்த்துப் பேசுவதற்காக அவர்கள் என்னிடமும் உரையாடிச் சென்றார்கள். நான் யாரையும் பார்க்கப் போவதில்லை. அப்படிப் போய்ப் பார்க்க வேண்டும் என்று விரும்புவதுமில்லை. ஆனாலும் பல பத்திரிகைகளிலும் என் கதைகள் வந்து கொண்டிருந்தன. சில பணம் தந்தன. பல சன்மானம் என்று எதுவும் தருவதில்லை. அதைப் பற்றி நான் கவலைப்பட்டதுமில்லை. கேட்டவர்களுக்கெல்லாம் எழுதிக் கொடுத்தேன். சினிமா உலகம் பத்திரிகையில் என் எழுத்துக்கள் அதிகமாகவே வெளிவந்தன. திருச்சி 'சிவாஜி' பத்திரிகையிலும் தொடர் கதை, சிறுகதை, கட்டுரை என்று பிரசுரமாயின. ஆங்கிலப் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் தமிழிலும் சிறப்பாக எழுதக் கூடியவர். நாணல் என்ற பெயரில் கவிதைகள் எழுதினார். சிறுசிறு நாடகங்கள் எழுதியிருக்கிறார். அவர் 'சிந்தனை' என்ற பெயரில் ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்தினார். சென்னையிலிருந்து மாதந்தோறும் வெளிவந்த தரமான இதழ் அது. ஒவ்வொரு மாதமும் என் கதையைச் 'சிந்தனை வெளியிட்டது. நீதிபதி எஸ். மகாராஜன் திருமூலர் பற்றிய அருமையான கட்டுரைகளை அதில் எழுதி வந்தார் சிந்தனை ஒரு வருடம் தான் நடந்தது. 1948இல் கும்பகோணத்திலிருந்து எம்.வி.வெங்கட்ராம் தேனீ என்ற மாத இதழை நடத்தினார். அதிலும் என் சிறுகதைகள் வந்தன. தேனீயும் ஒரு வருடம் தான் வெளிவந்தது. இப்படி எத்தனையோ பத்திரிகைகள். ஆர்வத்தாலும், ஆசை காரணமாகவும் பத்திரிகைகளை ஆரம்பிப்பதும், தொடர்ந்து நடத்த முடியாமல் அவை அல்பாயுசில் முடிந்து போவதும் எல்லாக் காலத்திலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இம் முயற்சியில் சிலரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் வியந்து போற்றப்பட வேண்டியவையாகும். அத்தகையவர்களில் தியாகி என்ற இதழை நடத்திய இராம. சடகோபன் முக்கியமானவர். அவர் விழுப்புரத்தில் ஆடம்பரம் இல்லாமல், மிக எளிய முறையில் தியாகி இதழை நடத்திக் கொண்டிருந்தார். ஆரம்ப நாட்களில் திருலோக சீதாராம் அதில் பயிற்சி பெற்ற அனுபவம் உண்டு. தியாகி ஆசிரியர் இராம.