பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

డడ్లీ வாழ்க்கைச் சுவடுகள் எபிஷியன்ட் பப்ளிசிட்டீசுக்கு அண்ணா அசோகனின் வேலை தேவையாக இருந்தது. எனவே அவரைத் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவராகச் சேர்த்துக் கொள்ள எபிஷியன்ட் சகோதரர்கள் முன்வந்தார்கள். சிறிது காலம் அச்சகத்தில் வேலைபார்த்த அண்ணா முடிவில் சகோதரர்களின் விளம்பர ஆலோசனை நிறுவனத்தில் சேர்ந்துவிட்டார். நான் வழக்கம்போல் படிப்பதும் எழுதுவதுமாகச் செயலாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது தேவை இல்லாமலே ஒரு வேலை என்னைத் தேடி வந்தது. 'ஹனுமான் வாரப் பத்திரிகையில் சேர்ந்து அதற்குப் புத்துயிர் அளிக்க வேண்டும் என்று அதன் நிர்வாகிகள் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். 'ஹனுமான் தனி வரலாறு உடைய வார இதழாக வளர்ந்திருந்தது. 1930களின் இறுதியில், தேசிய இதழாக அது பிறந்தது. சங்கு சுப்பிரமணியன் சிறிது காலம் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் தி.ஜ ரங்கநாதன் ஆசிரியப் பொறுப்பேற்றிருந்தார். பிறகு, றாலி என்ற புனைபெயர் கொண்ட எம்.ஜே. ராமலிங்கம் வெகுகாலம் அதன் ஆசிரியராக இருந்தார். அவருக்குப் பிறகு பி.எம். கண்ணன் ஆசிரியரானார். அவர் வாசகர்களின் கவனத்தை ஈர்த்த அவரது நாவல்கள் பலவற்றை அதில்தான் தொடர்கதையாக எழுதினார். அச்சமயம் பி.ஆர்.எஸ். கோபால் சினிமாப் பகுதியைக் கவனித்து வந்தார். அவருடைய குண்டுசியின் பதில்கள்' எனும் கேள்வி பதில் பகுதி பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. ஆரம்பத்தில் நல்ல ஆதரவும் கவனிப்பும் பெற்று வந்த ஹனுமான்' கால ஓட்டத்தில் தேய்ந்து விற்பனை குறைந்து, ஏதோ பத்திரிகை என்று வந்து கொண்டிருந்தது. வெகு காலம்வரை தினமணி நாளிதழ் அளவில் வெளிவந்த வார இதழ் பின்னர் தினமணியை இரண்டாக மடித்த அளவில் வரத்தொடங்கியது விற்பனை குறைந்து வருமானம் போதிய அளவில் இல்லை என்ற நிலையில், அதிகமான தொகையைச் சம்பளமாகப் பெற்றுவந்த ஆசிரியர்கள் விலகிக் கொண்டார்கள். பிரபலமில்லாத சில எழுத்தாளர்கள் பத்திரிகைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். நிர்வாகமும் கைமாறியது. பத்திரிகை ஆரம்பித்து நடத்திய அதிபர் அதை பத்திரிகை உலக அனுபவமில்லாத அத் துறைக்கே முற்றிலும் புதியவர்களான சிலரிடம் விற்றுவிட்டார்கள். பத்திரிகையின் வரலாற்றுப் பெருமைக்கும் நல்ல பெயருக்குமாகப் புதியவர்கள் மிக அதிகமான பணம் கொடுக்க நேர்ந்தது. அவர்களால் பழைய அளவு சம்பளம் கொடுக்க இயலாது என்ற நிலையில்தான் அதுவரை ஆசிரியராக இருந்த பி.எம். கண்ணன் விலகிக் கொண்டார். குண்டுசி கோபால் குண்டுசி என்ற பெயரில் சினிமாப்