பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#48 வாழ்க்கைச் சுவடுகள் நாடகம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடைபெற்றது. நன்றாகவே அமைந்திருந்தது. பேராசிரியர் அன்பழகன் நாடகத்தையும் நடித்தவர்களையும் வெகுவாகப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். டைரக்டர் சுப்பிரமணியம் வரவேயில்லை. அது நாடகத்தில் நடித்த தோழர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. பத்திரிகைகள் பாராட்டி எழுதியிருந்தன. அதனால் மகிழ்ச்சி அடைந்த வாத்தியார் வரதராஜனும், தொழிலாளத் தோழர்களும், சில மாதங்களுக்குப் பிறகு விடியுமா? நாடகத்தை மீண்டும் மேடை ஏற்ற முன்வந்தார்கள். இம்முறை வரதராஜனே கதாநாயகன் பாத்திரத்தை ஏற்று நடித்தார். நாடகம் அனைவருக்கும் திருப்தி தந்தது. அதைத் தவிர வேறு பலன் எதுவும் கிட்டவில்லை. அதன் பிறகு வரதராஜன் என் பார்வையில் படவில்லை. விடியுமா? நாடகமும் கவனிக்கப்படாமலே போயிற்று. 23 நான் ஹனுமான் பத்திரிகைப் பணியை விட்டதும் எனக்கு நானே ஒரு தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டேன் இனிமேன் எந்தப் பத்திரிகை அலுவலகத்துக்கும் போட்டப் பணி புரிவதில்லை என்று வழக்கம்போல் வீட்டில் இருந்தவாறே படிப்பதும் எழுதுவதும் என்று காலம் கழிப்பதே நல்லது என்று எனினும், என் மனஉறுதியைக் குலைக்க முயல்வன போல சிலசில வாய்ப்புகள் அவ்வப்போது வரத்தான் செய்தன. ஒருநாள் சின்ன அண்ணாமலையும் கவி கா.மு. ஷெரீபும் தேடிவந்தார்கள். அதையும் இதையும் பேசிப் பொழுது போக்கிவிட்டு, சின்ன அண்ணாமலை சொன்னார். நாங்கள் உங்களைப் பார்க்க வந்தது ஒரு முக்கிய விஷயமாக, ஷெரீப் வாரப் பத்திரிகை ஒன்று ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்கிறார். அவருக்குத் துணையாக அந்தப் பத்திரிகையில் வேலை செய்ய நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் விரும்புகிறார். நீங்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம். என்ன சொல்கிறீர்கள்? நான் அதை ஏற்றுக் கொள்வதற்கில்லை' என்று சொன்னேன் அவர்கள் எதிர்பார்த்திராத பதில் அது $ - - - - w - - ஏன்? போதுமான சம்பளம் கிடைக்காது என்று நினைக்கிறீர்களா? என்று அண்ணாமலை கேட்டார்.