பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 15; பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார். சிறுகதை எழுதுவது எப்படி என்று வகுப்புகள் நடத்தி இளைஞர்களை எழுத்தாளர்களாக்குவதில் உற்சாகம் காட்டினார். கந்தசாமி வாத்தியார் என்று பெயர் வைத்துக்கொண்டு உருப்படியான காரியங்கள் பல செய்தார். ஆனாலும் அவருடைய குணங்கள் அங்கும் அவருக்கு எதிர்ப்பாளர்களையே மிகுதியாகப் பெற்றுத் தந்தன. மேலதிகாரிகளோடும். பழகியவர்களோடும் நண்பர்களோடும் சதா சண்டை பிடித்து கெட்ட பெயர் வாங்கிக் கொண்டார். கடைசியில் மனஅமைதியின்றி இறந்து போனார். அவர் நடத்திய கதை வகுப்புகளையும், தமிழ்ப்பணிகளையும் மலேயாத் தமிழர்கள் மறக்கவில்லை. பயன் பெற்றவர்கள் நினைவுகூரத் தsபறவுமில்லை. அவருக்குப் பிறகு கோலாலம்பூருக்குத் தமிழ்நேசன்' இதழில் பணிபுரியச் சென்ற கு. அழகிரிசாமியும் சுப. நாராயணனின் பணிகள் குறித்துப் பாராட்டி எழுதியிருக்கிறார். 'சக்தி பத்திரிகையை வை. கோவிந்தன் நிறுத்திவிட்ட பிறகு அதில் ஆசிரியராகப் பணிபுரிந்த கு. அழகிரிசாமி வேலையில்லாதவராகிது சிரமப்பட்டார். கோலாலம்பூர் 'தமிழ் நேசன் பணி வந்ததும், அவர் மலேயாவுக்கு மகிழ்வுடன் போனார். அங்கே அவர் வசதியாக வாழமுடிந்தது. சங்கீதப் பயிற்சி உடைய ஒரு பெண், கு.அ.வின் இசைநயம் செறிந்த கதைகளால் ஈர்க்கப்பட்டு, அவர் ரசிகை ஆகி, அவரையே மணம் புரிந்து கொண்டாள். இசைத் துறையில் முன்னேறிப் புகழ் பெறவேண்டும் என்ற உள்உந்துதல் காரணமாக, அந்த அம்மணி கணவனைத் தூண்டி வற்புறுத்தி, தமிழகத்துக்கே அவர் திரும்பிவரும்படி செய்தார். மீண்டும் வாழ்க்கைத் துயரங்களில் சிக்கிச் சுழன்றார் அழகிரிசாமி. கிராம ஊழியன் காலத்திலேயே என் நண்பராகிவிட்ட - என்விட, மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்த சுப. நாராயணன், கோலாலம்பூரில் வாழ்ந்தபோது, நீங்கள் எப்போது இங்கே வருகிறீர்கள் என்ற கேட்டுக்கொண்டேயிருந்தார். சிங்கப்பூர் 'தமிழ்முரசு' வேலைக. வைத்துக்கொண்டு விரும்பி அழைத்து போதும். நான் அங்கே , மறுத்துவிட்டதை அதன் ஆசிரியர் மூலம் அறிந்த நண்பர் எனக்கா, வருத்தப்பட்டார். வேதனையோடு கடிதம் எழுதினார். தமிழ்நாட்டில் என். இருக்கிறது என்று அதைவிட்டு வர நீங்கள் மறுக்கிறீர்கள்? தமிழ்நாடு திறமையான, தன்மானமுள்ள எழுத்தாளர்களைச் சாகடிக்கும் இயல்புடையது. திறமையான எழுத்தாளர்களுக்கு உரிய அந்தஸ்தை அந்த நாடு தருவதேயில்லை. கவி பாரதியாரை அது வாழவைத்ததா? புதுமைப்பித்தனுக்கு உரிய வாழ்வு தந்ததா? இப்படி எத்தனையோ எழுத்தாளர்களை, அவர்களது மதிப்பை அறியாது அலட்சியப்படுத்திவரும் மண் அது அதன்மீது உங்களுக்கு