பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蓝莎翁 வாழ்க்கைச் சுவடுகள் அவரது நெய்க்கடைக்கு எதிர்வரிசையில் லாயல் பிரஸ் என்றொரு அச்சகம் இருந்தது. அதன் முதலாளி சென்னியப்பனின் நண்பர். இருவரும் பேச்சோடு பேச்சாகத் தொழில் வளர்ச்சி பற்றியும் திட்டமிட்டார்கள். புத்தக வெளியீட்டுத் தொழிலில் ஈடுபட இருவரும் தீர்மானித்தார்கள். கூட்டு சேர்ந்தார்கள். கயிலைப் பதிப்பகம் தொடங்கினார்கள். அதன் முதலாவது வெளியீடு தெ.பொ.மீ. அவர்களின் கட்டுரை நூலாகும். இரண்டாவது பிரசுரம் வல்லிக்கண்ணன் கதைகள். இத் தொகுப்பு 1954இல் வெளிவந்தது. எனது முதல் கதைத் தொகுப்பு கோயம்புத்தூரில் எஸ்.பி. கிருஷ்ணன் என்ற நண்பரால் லாண்டரிக் கடைத் தோழர் ஒருவரது கூட்டுடன் வெளியிடப்பட்டது. 1944இல் இரண்டாவது தொகுப்பும் அதே வருடம் வந்துவிட்டது. எஸ். சிதம்பரம் என்கிற வைர வியாபாரியின் மகன் புகழ் மோகம் கொண்டு இலக்கியத் துறையில் இறங்கியதன் பயனாக வெளிவந்தது. மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவருவதற்குப் பத்துவருடங்கள் தேவைப்பட்டுள்ளது. இதையும் தொழில்முறைப் புத்தக வெளியீட்டாளர்கள் பிரசுரமாக்கவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது ஆகும். 24 கால ஓட்டத்தில் எத்தனையே மாற்றங்களும் வளர்ச்சிகளும் புதுமைகளும் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. அரசியல், சமூகம், தொழில் முதலிய துறைகளில் ஏற்படும் இவை மற்றுமுள்ள சகல துறைகளையும் வெகுவாகப் பாதிக்கின்றன. இந்திய நாடு விடுதலை பெறவேண்டும் என்பதற்காக அகில இந்திய தேசீயக் கட்சிகள் போராடின. மகாத்மா காந்திஜீயின் தலைமையில் காங்கிரஸ் கட்சி இதில் பெரும்பங்கு வகித்தது. இந்திய சுதந்திரப் போராட்டம் வெறும் அரசியல் போராட்டமாக மட்டுமே அமைந்திருந்ததில்லை. அரசியல் விடுதலை உணர்வோடு, சமூக சீர்திருத்த வேட்கையும், தனி மனிதப் பண்பாட்டு உயர்வு உணர்ச்சியும், தாய் மொழி வளர்ச்சி வேகமும் சேர்ந்தே செயல்பட்டன. மொழி வளர்ச்சி உணர்வு பத்திரிகைகளின் வளர்ச்சிக்குத் துணை புரிந்தது. நாட்டு மக்கள் மத்தியில் அரசியல் விடுதலை உணர்வு, சமூகச் சீர்திருத்த உணர்வு, பண்பாட்டு உயர்வு இலக்கிய உணர்வு முதலியவற்றைப் பரப்புவதற்குப் பத்திரிகைகள் உதவின.