பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 戴态9 சிந்தனையாளர்களின் நூல்களைப் படித்ததனால், பிரம்ம சமாஜம் வெளியிட்ட தயானந்த சரஸ்வதி சிந்தனை நூலும் என்னில் தாக்கம் ஏற்படுத்தியிருந்தது. மற்றும் சித்தர் பாடல்கள், தமிழ் இலக்கியங்கள், தமிழ்க் கவிஞர்கள் எடுத்துக் கூறிய சிந்தனைகளும் என் சிந்தனையைப் பாதித்திருந்தன. . இதர பத்திரிகைகளில் என் எழுத்துக்களை விரும்பிக் கேட்டு வெளியிட்டது போல, திராவிட இயக்க இதழ்கள் என்னை அணுகியதில்லை. 'பொன்னி கூட, என்னை நெருங்கியதில்லை. மாறாக, 1940களில் திராவிட இயக்க ஏடுகள் வல்லிக்கண்ணன் எனும் எழுத்தாளனை வெகுவாகச் சாடியுள்ளன. 'ஆரிய அரவணைப்பு எனும் புளியங்கொம்பைப் பற்றிக் கொண்டு இலக்கிய உலகத்தில் முன்னேறிவரும் வல்லிக்கண்ணன் என்று ஒருசமயம் திராவிட நாடு பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. போர்வாள் என்ற ஏடு வசைபாடித் தனிக் கட்டுரையே எழுதியது. அந்நாளையப் பேச்சாளர்கள் சிலர் மேடையிலேயே என்னைக் கண்டித்து முழக்கமிட்டார்கள். நான் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவனுமில்லை. அன்பு, மனிதநேயம், சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், மனிதம் முதலிய உயர்ந்த பண்புகளைப் போற்றும்முறையில் எழுதிவந்ததால், நானும் முற்போக்கு இலக்கியவாதியாக மதிக்கப்பட்டேன். இடதுசாரிப் பத்திரிகைகள் என் எழுத்துக்களை ஏற்றுப் பிரசுரித்தன. முற்போக்கு இலக்கிய நண்பர்கள் தங்கள் பத்திரிகைப் பணிக்கு என் உதவியை நாடினார்கள். அப்படித்தான் சரஸ்வதி இதழுக்கு நான் பெரும்.அளவில் ஒத்துழைக்க நேர்ந்தது. நண்பர் விஜயபாஸ்கரன் கம்யூனிஸ்டாக இருந்த போதிலும், சரஸ்வதி மாத இதழைப் பொதுவான இலக்கிய ஏடு ஆக- 'கலைமகள் பத்திரிகை போல - நடத்த விரும்பினார். அதனால், கட்சிக் கொள்கையில் தீவிரப் பற்றுதல் கொண்ட எழுத்தாளர்களின் படைப்புகளோடு, க.நா. சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா, ந. சிதம்பரசுப்ரமண்யம் போன்றோரின் எழுத்துக்களையும் வரவேற்றுப் பிரசுரித்தார். சரஸ்வதியின் இரண்டாவது ஆண்டிலிருந்து இந்த வழக்கம் செயல்படுத்தப்பட்டது. எனது உதவியையும் கோரினார். சரஸ்வதி தரமான இலக்கிய இதழாக வளர்ந்தது. ஜெயகாந்தன் வளர்ச்சிக்கு அது பெரிதும் துணைபுரிந்தது. இலங்கை எழுத்தாளர்களின் அறிமுகத்துக்கும் அவர்களது இலக்கியமுயற்சிகள் தமிழ் வாசகர்களுக்குத் தெரியவருவதற்கும் உதவியது. நான் முதலில் சிறுகதைகள் மட்டும் எழுதிக்கொண்டிருந்தேன். பிறகு கட்டுரைகள், புத்தக மதிப்புரை, துணுக்குகள், நாவல் சுருக்கம் என்று அதிகமாகவே எழுதினேன். அநேக எழுத்தாளர்கள் இடையில் விட்டுப் பிரிந்து போன போதிலும், நான் சரஸ்வதியின் இறுதி இதழ்வரை எழுதிக் கொண்டிருந்தேன். . சரஸ்வதி நடந்துகொண்டிருந்த காலத்தில் கவிஞர் தமிழ்ஒளியும் ஜெயகாந்தனும் தினந்தோறும் E டெப்போத் தெரு தோட்ட வீட்டுக்கு வந்து