பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#643 வாழ்க்கைச் சுவடுகள் பொழுது போக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பல நாட்கள் கடற்கரைக்குப் போய் மாலை நேரத்தை இனிமையாகப் போக்குவதும் வழக்கமாயிற்று. ஆரம்ப நாட்களில் ஜெயகாந்தன் தமது ஆசைகளையும் இலட்சியக் கனவுகளையும் உணர்ச்சியோடு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய உணர்வுகளும் ஆற்றலும் உழைப்பும் அவரை வளர்ச்சிப் பாதையில் முன்னேறச் செய்தன. தமிழ்ஒளி பத்திரிகை உலகம், புத்தகப் பிரசுரத்துறை, எழுத்தாளர்கள் பற்றி எல்லாம் கசப்புடன், காரசாரமாகத் தனது விருப்புவெறுப்புகளை ஒலிபரப்புவார். வாழ்க்கை அவரை வெகுவாகச் சோதித்துக் கொண்டிருந்தது. அவருடைய திறமைக்கு உரிய கவனிப்பு கிடைக்கவில்லை. இடைக்காலத்தில், தி.க.சிவசங்கரன், அவர் பார்த்துக் கொண்டிருந்த பாங்கு வேலையைத் துறந்துவிட்டு, சோவியத் செய்தித் துறையில் பணிபுரிவதற்காகச் சென்னை வந்து சேர்ந்தார். அந்தப் பணிநேரம் போக, தாமரை இலக்கிய இதழின் பொறுப்பைக் கவனிப்பதிலும் அவர் உற்சாகம் காட்டினார். ஜீவானந்தம் மறைவுக்குப் பிறகு, எழுத்தாளர் மாஜினி ஆசிரியப் பொறுப்பை விட்டுவிட்ட பின்னர், தி.க.சிவசங்கரன் ஆ. பழநியப்பன் எம்.கே. ராமசாமி மூவரும் ஆசிரியர் குழுவாக இயங்கி, தாமரையை உற்சாகத்துடன் வளர்த்தார்கள். பத்து வருட காலம் அது நடைபெற்றது. அக்காலகட்டத்தில் தாமரை மிகுந்த கவனிப்புக்குரிய முற்போக்கு இலக்கிய இதழாக விளங்கிற்று, நான் தாமரை”க்காகவும் உழைத்தேன். சிறுகதைகள், புத்தக மதிப்புரை என்று அதிகம் எழுதி உதவினேன். சரஸ்வதி, தாமரைப் பணிகள் மூலம் எனது எழுத்தாற்றல் மேலும் பரவலாகத் தெரிவதற்குக் காலம் துணைபுரிந்தது. இந்த சந்தர்ப்பதில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடும் வேகம் தமிழ்நாட்டில் நிலவியது. ரஷ்ய நூல்களைத் தமிழாக்கிப் புத்தகங்களாக வெளியிடுவதும், அமெரிக்க உதவியோடு அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் பிரசுரம் செய்வதும் அதிகம் செயல்படுத்தப்பட்டன. எனக்கும் மொழிபெயர்ப்புப் பணிகள் வந்து சேர்ந்தன. . டால்ஸ்டாய் கதைகள் சிலவற்றைத் தமிழாக்கினேன். அவை அலைட் பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தால் புத்தகமாகக்கப் பெற்றன. மாக்சிம் கார்க்கியின் டேல்ஸ் ஆஃப் இத்தாலி என்ற தொகுப்பிலிருந்து சில கதைகளை மொழிபெயர்க்க அவை வெண்புறா வெளியீடு ஆகப் பிரசுரம் பெற்றன. இவை இரண்டும் 1956 இல் வந்தன. திருநெல்வேலியில், சிந்துபூந்துறை அண்ணாச்சி' எனச் சிறப்புப் பெற்றிருந்த சண்முகம் பிள்ளை முற்போக்கு இலக்கிய நூல்களை வெளியிடுவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அதற்காக 'நெல்லை