பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#62 வாழ்க்கைச் சுவடுகள் விலையிலேயே விற்கப்பட்டன. ஆகவே அவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தாத்தாவும் பேரனும் மிகுந்த பாராட்டுதலைப் பெற்றுத் தந்தது. வெகு நாட்களுக்குப் பின்னரும், எதிர்பார்க்கமுடியாத இடங்களில் இருந்து கூட எவராவது தாத்தாவும் பேரனும் நூலை வியந்து ரசித்துப் பாராட்டியதைக் கேட்கமுடிந்தது. எனக்கு மனநிறைவும் மகிழ்ச்சியும் தந்தது அது. திருநெல்வேலியில் ரகுநாதன் 'சாந்தி மாத இதழை நடத்தி நிறுத்திய சில வருடங்களுக்குப் பிறகு, எஸ்.ஏ. முருகானந்தம் தூத்துக்குடியிலிருந்து 'சாந்தி என்ற பெயரிலேயே ஒரு பத்திரிகை வெளியிட முன்வந்தார். இது மாதம் இருமுறை ஏடு. இதன் முதல் இதழிலிருந்தே என் எழுத்துக்கள் இடம் பெற்றன. இலக்கியக் கட்டுரைகள், படித்த புத்தகங்கள் பற்றிச் சுவையான விவரிப்புகள், தனிரகமான சிறுகதைகள் என்று 'சாந்தி'யில் நிறையவே எழுதினேன். பொருளாதார சிரமங்களினால் 'சாந்தி பத்திரிகை நிறுத்தப்படுகிற வரை, என் எழுத்துக்கள் அதில் வந்துகொண்டிருந்தன. இவ்வாறு எனக்குப் பெயரும் கவனிப்பும் அதிகரித்து வந்தபோதிலும், அவை பணம் போதிய அளவு கிடைப்பதற்கு வழி செய்யவில்லை. இலட்சிய நோக்குடனும் கொள்கைப் பற்றோடும் மனஉறுதியோடு சிற்றிதழ்களை நடத்தியவர்கள் மிகுந்த பொருளாதார சிரமங்களை அனுபவிக்க நேர்ந்தது. அப்படி சிரமங்களைச் சகித்துக் கொண்டு அவர்கள் தளராது இலட்சியப்பணி புரிந்துவந்ததனால், நான் அவர்களுக்கு மகிழ்வுடன் எனது ஒத்துழைப்பை வழங்கினேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மற்றொரு இலட்சியவாதியாகிய சி.சு. செல்லப்பா துணிந்து இலக்கிய விமர்சனத்துக்காக ஓர் இதழ் என்று மாதப் பத்திரிகை நடத்த முன்வந்தார். அதற்குத் துணிச்சலாக எழுத்து என்ற பெயரைச் குட்டினார். துணிகரமான சில கட்டுப்பாடுகளையும் அவர் வகுத்துக்கொண்டார். 25 கால வேகத்தில் பத்திரிகைகளில் போக்குகளும் மாறியிருந்தன. இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு பெரும்பாலான பத்திரிகைகள் தேச விடுதலையையே லட்சியமாகக் கொண்டு பாடுபட்டன. அவற்றில் ஈடுபட்டிருந்த எழுத்தாளர்களில் பெரும்பான்மையோர் அப்பணிப்போடும் தியாக மனப்பான்மையோடும் உழைத்து வந்தார்கள் டத்திரிகை தர்மம் எழுத்தாளர் தர்மம் என்றெல்லாம் கருதப்பட்டன.