பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 வாழ்க்கைச் சுவடுகள் 1965இல் முத்துக்குளிப்பு நூலை வெளியிட்ட கலைஞன் பதிப்பகம் 1966இல் எனது மூடுபனி நாவலைப் புத்தகமாக்கியது. வசந்தம் மலர்ந்தது என்ற பெயரில் அது பிரசுரம் பெற்றது. 1967இல் எனது மற்றொரு நாவல் வெளிவருவதற்கும் நண்பர் மாசிலாமணி உதவினார். அது கலைஞன் பதிப்பகம் வெளியீடாகப் பிரசுரம் பெறவில்லை வீடும் வெளியும்' என்ற அந்த நாவலை மாசிலாமணி அவருடைய நண்பர் சொக்கலிங்கத்திடம் தர, அவர் அதை 'காவேரி பதிப்பகம்’ மூலம் வெளியிட்டார் இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் ஈடுபட்ட உற்சாகிகளின் அனுபவங்கள், அவர்களது பிற்கால நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் அது அந்த நாவல் நல்ல பாராட்டைப் பெற்றது. தமிழ் நாவல் வரலாற்றை விரிவாக எழுதிய 'சிட்டி பெ.கோ. சுந்தரராஜன்-சோ.சிவபாதசுந்தரம் அவர்கள் நூலில் இந்த நாவலைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். வீடும் வெளியும் நாவல், புத்தகமாகப் பிரசுரம் பெறுவதற்கு முன்னால் தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ. சிவஞானகிராமணி அவர்களின் வார இதழான செங்கோல் பத்திரிகையில் தொடர்கதையாக வந்தது. 'செங்கோல் இதழில் எப்பவாவது நான் கட்டுரைகள் எழுதுவது உண்டு. ஒரு தொடர்கதை எழுதும்படி ம.பொ.சி. கேட்டதற்கு இணங்கி விடுதலைப் போராட்ட கால அனுபவங்களைக் கூறும் வீடும் வெளியும் நாவலை எழுதினேன். அந்த சந்தர்ப்பத்தில், ம.பொ.சியின் உதவியாளராகவும், செங்கோல்' பத்திரிகையின் நிர்வாகியுமாகப் பணிபுரிந்த வே. கணபதி E டெப்போத் தெரு தோட்டத்தில் நானும் என் அண்ணாவும் வசித்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் குடியிருந்தார். ரசம் என்ற பெயரில் எழுதி வந்த ர. சண்முகம், மற்றும் கணபதியின் தம்பி வே. சுப்பய்யா ஆகியோரும் அங்கு வசித்தார்கள். சுப்பய்யா அப்போது இன்பநிலையம் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் அந்தப் பதிப்பகத்திலிருந்து நீங்கி, சொந்தமாகப் பூங்கொடி பதிப்பகம் அமைத்து நாவலாசிரியர் லக்ஷ்மி, தலைவர் ம.பொ.சி, மற்றும் பலரது நூல்கள் வெளியிடலானார். தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த ஆகோ. வேங்கடராமானுஜமும் எங்கள் நண்பர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர். என் அண்ணா சினிமா உலகம் பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே அறிமுகமானவர் அவர் அவர் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு தொழில் புரிவதில் ஆர்வம் காட்டினார். நாதன்ஸ் பிரஸ் என்ற அச்சகத்தில் பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்த போது, அவர் எனது நாவல் ஒன்றை நாதன்ஸ் வெளியீடு ஆகப் பிரசுரம் பெற வழி செய்தார்.