பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 189 'ஹனுமான் வாரப் பத்திரிகையில் தொடராக அடுத்த வீட்டுக்காரி என்ற நாவலை எழுதினேன். அதை ரசித்திருந்த நண்பர் அனுஜன் - வேங்கடராமானுஜனின் புனைபெயர் இது அதைப் புத்தகமாகக் கொண்டு வருவதில் முனைப்புக் காட்டினார். நான் வைத்திருந்த பெயரை வேண்டாம் என ஒதுக்கிவிட்டு, நாவல் நாயகியின் பெயரான சகுந்தலா என்பதைப் புத்தகத்தின் பெயராக மாற்றிவிட்டார் அவர். அனுஜன் சுவாரசியமான நாவல்களும் சிறுகதைகளும் எழுதியுள்ளார். அவர் எழுதிய முதலாளி என்ற நாடகம் பின்னர் முதலாளி என்னும் திரைப்படமாக வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. 26 பொதுவாக நான் சென்னையில் வசித்தபோதிலும் ஆண்டு தோறும் ராஜவல்விபுரம் சென்று அங்கே இரண்டுமூன்று மாதங்கள் தங்குவதை வழக்கமாக்கியிருந்தேன். சில வருடங்கள் ஆறு மாத காலம் கூட கிராமத்தில் தங்கியதும் உண்டு. அதனால், 'நாடாறு மாதம் காடாறு மாதம் என்று வாழ்ந்த விக்கிரமாதித்தன் போல. நான் நாகரிகப் பெரும்நகரில் ஆறு மாதங்களும் கிராமத்தில் ஆறுமாதமும் வசிக்கிறேன் என்று நண்பர்கள் குறிப்பிடுவார்கள். நாகரிகப் பெரும் நகரமான சென்னையில் வசிக்கிற நீங்கள், வசதிகளற்ற இந்தப் பட்டிக்காட்டில் எப்படி சந்தோஷமாக வாழ முடிகிறது என்று சிலர் அவ்வப்போது கேட்பார்கள். எனக்கு எல்லா இடமும் ஒன்றுபோல் தான் புத்தகங்கள், தாள்கள், பேனா மை இவை தட்டுப்பாடின்றிக் கிடைக்கக் கூடிய எந்த இடத்திலும் நான் சந்தோஷமாக வாழமுடியும் கடிதப் போக்குவரத்துக்குத் துணை புரியும் தபால் ஆபீஸ் அங்கு இருந்தால் அது எனது சந்தோஷங்களை அதிகப்படுத்தும் என்று சொல்வேன். - சென்னையில் இருந்தாலும் சரி, ராஜவல்லிபுரத்தில் தங்கினாலும் சரி நான் ஒரே சீராகச் செய்வது படிப்பதும் எழுதுவதும் தான். யாரையும் போய்ப் பார்க்கவேண்டும் என்று நான் விரும்புவதில்லை. மற்றவர்கள் வந்து என்னைக் காண வேண்டும் என நான் ஆசைப்படுவதுமில்லை. 'ராஜவல்லிபுரத்தில் அப்படி என்ன கவர்ச்சி சக்தி இருக்கிறது? ஒவ்வொரு வருடமும் அங்குப் போய் மாதக்கணக்கில் தங்கிவிடுகிறீர்கள்? என்று அடிக்கடி யாராவது என்னிடம் கேட்பது உண்டு. ஒரு பத்திரிகைப் பேட்டியின் போது அதன் ஆசிரியர் இதே கேள்வியை என்னிடம் கேட்டார். எல்லோருக்கும் சொல்கிற காரணத்தைத் தான் அவருக்கும் பதிலாகச் சொன்னேன். ராஜவல்லிபுரம் என்ற ஊர் என்னை ஈர்ப்பதற்கான காரணம்