பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 互ア5 என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. அதனால், பத்து இதழ்களுக்கு வருமாறு கட்டுரைத் தொடர் இருந்தால் போதும் ஒவ்வொரு இதழிலும் நான்கு பக்கங்கள் வரும் அளவுக்கு எழுதினால் நல்லது என்றும் கோரிக்கை வெளியிட்டார். ஆரம்பத்தில் நான்கு இதழ்களுக்கு சரஸ்வதிக்கு முற்பட்ட இலக்கிய இதழ்கள் பற்றி எழுதினால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நண்பர் சி.சு. செல்லப்பாவும் அவருக்குத் துணையாக வந்திருந்தார். நாடாவின் விருப்பப்படியே கட்டுரைகள் எழுதித்தர நான் இசைந்தேன். அதற்கு முன்னர் 'தீபம் இதழ்களில், அவ்வப்போது சிறுகதை எழுதிவந்தேன். ஒவ்வொரு ஆண்டு மலரிலும் எனது கதையும் இடம் பெற்றது. 'சரஸ்வதி காலம் என்ற தலைப்பில் ஆரம்பத்தில் நான்கு பகுதிகள் கவி பாரதியாரின் பத்திரிகை முயற்சிகள் முதல் சக்தி பத்திரிகை ஈறாக, அனைத்து இலக்கியச் சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களைக் கொண்டிருந்தன. அதன் பிறகு முற்போக்கு இலக்கிய இதழான சரஸ்வதியின் வரலாறும் அதன் சாதனைகளும் விரிவாக விவரிக்கப்பட்டன. - நா.பா. வும் பிறரும் எதிர்பார்த்திராத அளவுக்கு இத்தொடர் வாசகர்களின் வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்றுத்தந்தது. எனவே தொடர்ந்து இலக்கிய வரலாற்றுத் தொடர்கட்டுரை எழுதும்படி நா.பா. என்னைக்கேட்டுக்கொண்டார். இப்போது அவர் எந்தவிதமான பக்கக் கட்டுப்பாடோ, காலவரம்போ நிர்ணயிக்கவில்லை. எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதுங்கள் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் அது வளரட்டும் என்று எனக்குச் சுதந்திரம் அளித்து விட்டார். நான் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிக் கட்டுரைகள் எழுதினேன். இத் தொடர் தீபம்’ இதழில் நாலரை வருட காலம் வந்தது. அதற்கு மிகப் பெரும் வரவேற்பு கிட்டியது. ஆகையால், தொடர்ந்து கட்டுரைகள் எழுதும்படி நா.பா. கோரினார். 'பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை என்ற கட்டுரைத் தொடரை எழுதினேன். அது மூன்று வருடங்களுக்கு மேலாக வெளிவந்தது. அதை அடுத்து தமிழில் சிறுபத்திரிகைகள் என்ற தொடரை எழுத, அது நாலரை வருடங்கள் வந்தது. இக்கட்டுரைத் தொடர்களினால் 'தீபம்' பத்திரிகைக்கும் மதிப்பு ஏற்பட்டது. அவற்றை எழுதிய எனக்கும் பெயர் வந்தது. எந்த அளவுக்கு என்றால், வல்லிக்கண்ணன் நல்ல சிறுகதை எழுத்தாளன், நாவலாசிரியன் என்ற மதிப்பு வாசகர்களால் மறந்து போகிற அளவுக்கு குறிப்பிடத் தகுந்த இலக்கிய வரலாற்றுத் திறனாய்வாளன் என்று சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது. பொதுவாக நான் என் எழுத்துக்களை யார் படிக்கிறார்கள். அவை எப்படி வரவேற்கப்படுகின்றன என்றெல்லாம் கவலைப்பட்டதில்லை. அதை