பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் . 靖ァプ வீட்டில் பெரிய மாடி முழுவதும் சம்மா தான் கிடக்கு நீங்கள் தாராளமாக உபயோகித்துக் கொள்ளலாம். இங்கேயே தங்குவதானாலும் தங்கிக்கெள்ளலாம் என்றார். ராஜவல்லிபுரத்தில் தங்குவது தான் எங்களுக்குச் சவுகரியம் என்று சொல்லிவிட்டோம். அப்படியே செய்தோம். தினசரி அதிகாலையில் செல்லப்பாவும் நானும் எழுந்து ஆற்றுக்குப் போய் நீராடி வருவோம். இசக்கி என்கிற முத்தம்மாள் தோசை தயாரித்திருப்பாள். சில நாள் பக்கத்து வீட்டில் இட்டிலி வியாபாரம் செய்யும் அம்மாளிடம் இட்டிலி வாங்கி வைத்திருப்பாள். அவற்றைச் சாப்பிட்டு விட்டு பஸ்ஸில் திருநெல்வேலி ஜங்ஷன் வருவோம். நான்கு மைல் தூரம் சிந்துபூந்துறை போய், அண்ணாச்சியிடம் சிறிது பேசிவிட்டு, புத்தகப்பைகளுடன் ஒன்பது மணிக்கெல்லாம் புறப்பட்டு விடுவோம். இது தினசரி நியதி ஆயிற்று. இவ்விதம் இரண்டு மாதங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றினோம். கல்லூரி கல்லூரியாகப் போனோம். பேட்டை, பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரிகளை முதலில் முடித்து விட்டுத் தூத்துக்குடி போனோம். தூத்துக்குடியில் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் வ.உ.சி. கல்லூரி முதல்வராக இருந்தார். அவர் நல்ல இலக்கிய ரசிகர் எழுத்தாளரும் கூட எங்கள் நண்பரும் ஆவார். அவர் எங்களை வரவேற்று வேண்டிய உதவிகள் எல்லாம் செய்தார். இதர கல்லூரிகளுக்கு ஃபோன் மூலம் தகவல் சொல்லி எங்களுக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார். சிலருக்குக் கடிதமும் தந்தார். ஒரு நாள் அவர் வீட்டில் தங்குவதற்கும் உதவினார். பிறகு, சாயர்புரம், பூரீவைகுண்டம், நாசரேத், திருச்செந்தூர் என்று பல ஊர்களுக்கும் போனோம். எந்த ஊர் கல்லூரிக்குப் போனாலும், அங்கே இருந்த தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். புத்தகங்கள் வாங்கினார்கள். பெயர் பெற்ற எழுத்தாளர்கள் இரண்டு பேர் இப்படித் திடீரென்று வந்திருக்கிறீர்களே. இங்குள்ள மாணவர்களுக்கு எழுத்தாளர்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பே கிடையாது. நீங்கள் முன்னதாக அறிவித்திருந்தால், இலக்கியக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, உங்களை நல்லமுறையில் அறிமுகம் செய்திருக்க முடியுமே என்று வருத்தப்பட்டார்கள். இக் கால கட்டத்தில் தான், 'தீபம்' பத்திரிகையில் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரைத் தொடர் வந்துகொண்டிருந்தது. மதுரைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கல்லூரிகளில் தற்கால இலக்கியமும், புதுக்கவிதையும் பாடநூல்களாக வைக்கப்பட்டிருந்தன. எனவே, அந்த இலக்கியத் தொடரை எல்லோரும் விரும்பிப் படிக்கிறார்கள் மாணவர்களுக்கு