பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 வாழ்க்கைச் சுவடுகள் 12 நவம்பர் 2000 . . . எனக்கு என்பது வயது நிறைந்து எண்டத்தோராவது வயது ஆரம்பமான நாள் என்பது வருடங்கள் என்பது எல்லையற்ற காலப் பரப்பில் மிகச் சிறிய அளவேயாகும். ஆயினும் தனிமனித வாழ்க்கையின் அது பெரியதொரு காலகட்டம் தான். எத்தனை எத்தனையோ விதமான அனுபவங்களுக்குத் தளம் அமைத்துத்தரும் காலப்பரப்பு விதம்விதமான மனிதர்களை அறிந்துகொள்ள உதவுகிற காலக்களம். வியக்கவும் ரசிக்கவும் அனுபவ ஞானம் பெறவும் துணைபுரிகிற அரங்கமாகவும் அது அமைகிறது. பொதுவாக, வாழ்க்கை அர்த்தமற்றது' என்று சீரிய சிந்தனையாளர்களால் மதிக்கப்படுகிறது. உண்மையில், வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாகவும் மாண்பு நிறைந்ததாகவும் ஆக்கிக் கொள்ளக்கூடிய ஆற்றல் ஒவ்வொரு மனிதரிடமும் உள்ளது. தேடிச் சேறு நிதந்தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போவே - நான் விழ்வே னென்று நினைத்தாடோ?