பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் #73 28 ஊர்சுற்றுவது எனக்குப் பிடித்தமான விஷயங்களில் ஒன்று படிப்பது எழுதுவது ஊர்சுற்றுவது ஆகியவற்றை எனது வாழ்க்கை முறையாக வரித்துக்கொண்டிக்கிறேன். கூடியவரை தமிழ்நாட்டின் பலப்பல ஊர்களையும் போய்ப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆசையை நான் வளர்த்துவந்தேன். சிறுபிராயத்தில் தங்கியிருந்த ஊர்களை மீண்டும் சென்று காணவேண்டும் என்ற எண்ணம் என்னுள் வளர்ந்தது. என்னுள் நிலையான பதிவுகளை ஏற்படுத்தியிருந்த ஊர்களுள் பெருங்குளம் முக்கியமானது எனது ஆறு. ஏழாவது வயதுகளில் நான் அங்கே வாழ்ந்தேன். அந்த ஊரின் அனைத்து விவரங்களும் என் உள்ளத்தில் பசுமையாக நிலைத்திருந்தன. அந்த ஊரை மீண்டும் காணக்கூடிய வாய்ப்பு எனக்கு எனது ஐம்பத்து நான்காவது வயதில் கிட்டியது. - 1974இல் சி.சு. செல்லப்பாவுடன் சேர்ந்து சுற்றியபோது எதிர்பாராத விதத்தில் பெருங்குளம் சேர நேரிட்டது. தூத்துக்குடியில் இருந்து பூரீவைகுண்டம் போகத்திட்டமிட்டார். செல்லப்பா. நேர் பஸ் இல்லை. பெருங்குளத்துக்கு ஒரு பஸ்ஸில் போய், அங்கிருந்து பூரீவைகுண்டத்துக்கு வேறொரு பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும் என்று தெரிந்தது. ஆகவே பெருங்குளம் போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்து நீவைகுண்டத்துக்குப் பஸ் கிடைக்க நேரம் அதிகமாகும் எனத் தோன்றியது. வேறு நகரத்திலிருந்து வருகிற ரூட் பஸ் அவ்வூரில் நிற்கும் அதில் இடம்பிடித்துச் செல்லவேண்டும் என்று சொல்லப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் நாங்கள் பெருங்குளம் ஊரில் காத்து நின்றோம். அவ்வேளையில் நான் அந்த ஊரை. என் நினைவில் பதிந்த இடங்களைப் பார்த்தேன். முன்பு வளமாக, தென்னந்தோப்புகளும் மரங்களும் பசுமையுமாகக் காட்சி அளித்த ஊர் இப்போது வளமும் அழகும் பசுமையும் குன்றிக் காணப்பட்டது. வறுமையில் அடிபட்ட ஊராகக் காட்சி தந்தது. செங்கோல் மடம் எனும் சைவ மடம் அந்நாட்களில் விழிப்புடன் செழிப்பாக இருந்தது. இச்சமயம் அது துங்கி வழியும் இடமாக, சிதைந்து நூலாம்படை பற்றி, ஒரு பகுதி இடிந்த நிலையில் காணப்பட்டது. முன்பு நாங்கள் சிவன் கோயிலுக்கு நேர் எதிரே இருந்த தெருவில் உள்ள ஒரு பெரிய வீட்டில் வசித்தோம். அந்த வீட்டுக்கு எதிராக சட்ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ், தெருவில் ஐந்தாறு வீடுகளே இருந்தன. இப்போது வீடுகள் குறைந்திருந்தன. ஆபீஸ் சோகமுலாம் பூசியது போல் நின்றது. அதன் அருகில் உள்ள வெற்றிடத்திலும், சிவன் கோயிலுக்கும் தெருவுக்கும் போகிற சின்னத்