பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1843 வாழ்க்கைச் சுவடுகள் தெருவிலும் வேலிக்கருவை நீர்க்கருவேல் என்று சொல்லப்படுகிற முட்செடிகள் புதர்புதராக மண்டி வளர்ந்திருந்தன. ஆட்கள் நடந்துபோவதற்கு மத்தியில் குறுகலான பாதையே இருந்தது. சிவன் கோயிலும் விழிப்பாக இல்லை. தென்மாவட்டங்களின் வளமற்ற-வறட்சி படிந்த பலப்பல கிராமங்களுக்கும் ஒருவகை மாதிரியாகத்தான் காட்சி தந்தது பெருங்குளம், அதன் நிலையைக் காண்கையில் எனக்கு மனவேதனையே ஏற்பட்டது. ரொம்ப நேரத்துக்குப் பிறகு முக்காணி என்ற ஊரிலிருந்து வந்த பல், பெருங்குளத்தில் நிற்காமலே போய்விட்டது. அரை மணி கழித்து ஏரல் நகரிலிருந்து வந்த பஸ் நின்றது. அது மிக அதிகமான பயணிகளோடுதான் வந்தது. அதனுள் புகுவதற்காக இந்த ஊரிலும் அதிக ஆட்கள் ஆண்களும் பெண்களும் - காத்திருந்தார்கள். எல்லோருக்கும் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. ஒதுங்கி நின்ற எங்கள் இருவரைத் தவிர மற்ற அனைவரும் பஸ்ஸினுள் புகுந்துவிட்டார்கள். இந்த நெரிசலில் மாட்டிக் கொண்டு நாம் திணற வேண்டியதில்லை என்று நாங்கள் எண்ணினோம். அப்போதே மணி மாலை நாலரை ஆகியிருந்தது. இனி பஸ் வந்து, பூநீவைகுண்டம் போவது சரிப்பட்டு வராது. தூத்துக்குடிக்கே திரும்பி, அங்கிருந்து திருநெல்வேலி போய்விடுவோம்: இன்னொரு நாள் திருநெல்வேலியில் இருந்து நேரே பூநீவைகுண்டம் வரலாம் என்று செல்லப்பா முடிவு செய்தார். தூத்துக்குடி டோக எளிதில் பஸ் கிடைத்தது. பஸ் போக்குவரத்தில், எல்லா பஸ்களிலும் எப்போதும் நெருக்கடியும் கூட்டமும்தான். இடைவழி ஊர்களில் பஸ் பிடிக்க வேண்டுமென்றால் பயணிகள் வெகுநேரம் காத்திருக்க நேரிடுவதுடன், அநேக சமயங்களில் பஸ் கிடைக்காமல் போவதும் இயல்பாக இருக்கிறது. இன்றும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஒட்டப்பிடாரம் ஊரைக் காணக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அச்சிற்றுரில் நான் எனது மூன்று. நான்காவது வயதில் வசித்தேன். ராஜவல்லிபுரத்தில் நான் அம்மா, அண்ணாச்சியுடன் தங்கியிருந்த நாட்களில் ஒட்டப்பிடாரத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கு ஆ. குருசுவாமி என்ற இலக்கிய ரசிகர் வசித்தார். வசதிகள் படைத்தவர். ஒரு காலத்தில் கொழும்புவில் தங்கி வியாபாரம் செய்தவர். அவர் அங்கு வணிகராக இருந்த காலத்தில், இலங்கை முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்களுக்குப் பலவகைகளில் உதவிகள் புரிந்தவர். புதுமைப்பித்தன் எழுத்துக்களில் ஈடுபாடு கொண்டவர். ஒட்டப்பிடாரம் வந்து ஊரோடு தங்கி விவசாயத்தைக் கவனித்து வந்த காலத்திலும் இலக்கிய உலகத் தொடர்பை