பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 18; விட்டுவிடாது வளர்ப்பதில் ஆர்வம் காட்டினார். புத்தகங்கள் பத்திரிகைகள் அதிகம் வாங்கிப் படித்தார். அவருக்குத் துணை சேர்ந்திருந்தார் இளசை அருணா பள்ளி ஆசிரியரான இவர் ஓவிய எழுத்துக்கள் எழுதுவதில் திறமையும் தேர்ச்சியும் பெற்றிருந்தார். கவிதைகள் எழுதினார். கதை கட்டுரைகள் எழுதுவதும் உண்டு. ஒட்டப்பிடாரத்தில் இலக்கியக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வதிலும் முனைப்பானவர். நான் ஒட்டப்பிடாரம் வரவேண்டும். குருசுவாமியின்அதிதியாகச் சில தினங்கள் தங்கவேண்டும் என்று இவ்விருவரும் அழைத்தார்கள். போனேன். மூன்று-நான்கு நாட்கள் அங்கு தங்கினேன். ஒட்டப்பிடாரம் இனிய ஊராகத்தான் இருந்தது. முதல் முறை போனபோது வழிநெடுக உள்ள குளங்கள் ஏரிகள் எல்லாம் தண்ணீர் நிறைந்து காற்றில் அலைபுரள, அழகாகக் காட்சி தந்தன. புன்செய் காடுகளில் பயிர்கள் பசுமையாய்ச் செழித்து வளர்ந்தன. பிறகு இடைவெளிவிட்டு அவ்வப்போது அங்கே போக நேர்ந்தபோதெல்லாம் நீர்வளம் குறைந்து, விவசாயம் ஒய்ந்துபோன நிலையே காணப்பட்டது. சரிவர மழை பெய்யாததால் கிராமங்களில் வறட்சியும் வறுமையும் பெருகிவந்தது நன்கு புலனாகியது. எதிர்பாராத இடங்களில் எல்லாம் இலக்கிய நண்பர்கள் இருந்தார்கள். அவரவர் ஊர்களுக்கு நான் வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்களோடு சில நாட்கள் தங்கவேண்டும் என்று அன்புடன் உபசரித்தார்கள். ராஜபாளையம் த.பீ. செல்லம் நல்ல இலக்கிய ரசிகர். செல்வர். அதிகமாகப் புத்தகங்கள் வாங்கிப் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். கவிதைகளும் எழுதினார். மாளிகை போன்ற பெரிய வீடு அவருடையது. அதில் ஒரு அறை நிறையப் புத்தகங்களை அடுக்கிப் பாதுகாத்து வந்தார். திடீரென்று ஊர் சுற்றக் கிளம்பிவிடுவார். மதுரை, பெங்களுர், கோயம்புத்துர், திருவனந்தபுரம் என்று போய் வருவார். ஒவவொரு முறையும் புத்தகங்களையும் வேறு அரிய பொருட்களையும் வாங்கி வருவார். அவருடைய அழைப்பை ஏற்று ராஜபாளையத்துக்குப் போய் வந்தேன். கோமா. கோதண்டம், பன்மொழிப் புலவர் ஜகந்நாத ராஜா, மாதவன். 'கதைப்பித்தன் இரா. சுப்பிரமணியம், துரைராஜா முதலிய எழுத்தாளர்களும் ராஜபாளையத்திலிருந்து எழுதிக் கொண்டிருந்தார்கள், இலக்கியக் கூட்டங்கள் நடத்தினார்கள். புத்தகங்கள் வெளியிடுவதில் ஊக்கம் காட்டினார்கள். நாச்சியார்பட்டி என்றும் நாச்சியார் கோயில் என்றும் பெயர் பெற்ற கிராமத்தில் வசித்த சுப.கோ. நாராயணசாமி எழுத்து' 'தீபம்' இதழ்களில் கவிதைகள் எழுதினார். தாமரையில் கதைகள் எழுதிக்கொண்டிருந்தார். பள்ளி