பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் i85 கல்கத்தா சென்றபோது வழிநெடுகப் பசுமையாய், குளுமையாய், இனிமையாய்க் காட்சி தந்த வளங்கள் எல்லாம் இப்போது நாசமாக்கப்பட்டிருந்தன. வாழைகளும் பசிய மரங்களும் இதர வகைப் பயிர்களும் அடித்து நொறுக்கப்பட்டுச் சிதைத்துச் சின்னா பின்னமாக்கப்பட்டிருந்தன. எங்கெங்கும் எருமைகள், பசுக்கள், இதர மாடுகள் கன்றுகள், நாய்கள் செத்து, வயிறு உப்பி, நாற்றம்பரப்பிக்கிடந்தன. வழி நெடுக நின்ற தந்திக் கம்பங்களும், மின் விளக்குக் கம்பங்களும் மாய அசுரக் கரங்களால் துணிபோல் திருகி இறுக்கிப் பிழியப்பட்டனவாக வளைந்து நெளிந்து கோணிக் கிடந்தன. சற்றுத் தொலைவில் தெரிந்த ஊர்களில் வீடுகள், ஒடு வேய்ந்த கூரைகள் சிதைத்துச் சீர்குலைக்கப்பட்டிருந்தன. கூரை வீடுகள் என்ன பாடுபட்டிருக்கும் என்று எண்ண வைத்தன. வெறி பிடித்த பேய்க்காற்றினாலும் பயங்கர மழையினாலும் மனிதர்கள் - அபலைகளான பெண்களும் குழந்தைகளும் வலுவற்றுப் போன ஆண்களும் - எத்தகைய கஷ்டங்களை அனுபவித்திருப்டார்கள் என்ற நினைப்பு இதய வேதனை தந்தது. ஒரு வாரத்திற்குப் பிறகும் இப்படிக் கிடக்கிற அவலங்கள் மாறி இயல்புநிலை பெற இன்னும் எத்தனை வாரங்கள் ஆகுமோ என்று எண்ணாதிருக்க முடியவில்லை. ஒவ்வோர் ஆண்டும் கடலில் புயல் சின்னம் தோன்றுகிறது. புயலாக மாறி அது தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதியில் எங்காவது கரையைக் கடக்கக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கவும்படுகிறது. ஆனால் ஆண்டுதோறும் அது நகர்ந்து போய் ஆந்திரப் பிரதேசத்தில் கரையைக் கடந்து கடலோரப் பகுதிகளில் சேதம் விளைவிப்பதும் நடந்து வருகிறது. அதுபற்றிய செய்திகள் எனக்கு 1977ஆம் வருடப் புயலின் பின்விளைவுகளை நினைவுக்குக் கொண்டு வரும். அந்தப் பிரதேசத்தின் மக்களின் துன்ப துயரங்களை எண்ணி என் உள்ளத்தில் சோகம் படர்வது இயல்பாகி விட்டது. 29 நான் நல்ல பேச்சாளன் இல்லை. மேடைப்பேச்சு ஒரு தனிக்கலை அதில் நான் பயின்று தேர்ச்சி பெறவில்லை. வெகுகாலம் வரை நான் கூட்டங்களில் பேசமுற்பட்டதேயில்லை. அதை மறுத்தே வந்தேன். என் எழுத்துக்களைப் படித்தால் போதும் என்னைப் பார்க்கவும் எனது பேச்சைப் பலரும் கேட்கவும் வேண்டியதில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தேன். எனவே எந்தக் கூட்டத்துக்கும் போவதுமில்லை. ஆனாலும், நாள் ஆகஆக, கூட்டங்களில் பேசவேண்டிய கட்டாய நிலை எனக்கு ஏற்படலாயிற்று. மேடைப் பேச்சுக்குத் தேவையான குரல் ஏற்ற