பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#35 வாழ்க்கைச் சுவடுகள் இறக்கங்களுடன் பேசுவது நீட்டியும் இழுத்தும் பேச்சை வளர்ப்பது, இடையிடையே கவிதைகள், மேற்கோள்கள், சுவாரசியமான துணுக்குகள் முதலியவற்றைக் கலந்து அளித்துக் கேட்போரை ரசிக்கச் செய்வது போன்ற சாமர்த்தியங்கள் எனக்கில்லை. என் பேச்சு ஏதோ புத்தகத்தைப் பார்த்துப் படிப்பது போல ஒலிக்கும். மேலும், கேட்போர் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் நிறுத்தி நிதானமாகப் பேசாமல், வெகு வேகமாகப் பேசுவதாகப் பலரும் குறைகூறுவதும் உண்டு. இருப்பினும் என் பேச்சில் நிறைந்திருக்கிற தகவல்களும் விவரங்களும் அநேகரை வியக்க வைக்கும். குறிப்புகள் எதுவும் இல்லாமல், இடைக்கிடை எதையாவது டார்த்து அறியாமல், பொருளுக்குச் சம்பந்தப்பட்ட செய்திகளையும் தகவல்களையும் விடாது சொல்வதாக ரசித்தவர்கள் குறிப்பிடுவது வழக்கம். கல்கத்தா தமிழ்ச் சங்கத்தில் நாவல்கள் பற்றி நான் பேசிய விவரங்கள் பலரையும் வியக்கவைத்தன. எவ்வளவு நாவல்கள் படித்திருக்கிறீர்கள் அவற்றை எல்லாம் நினைவு வைத்து எடுத்துச் சொல்கிறீர்கள் அபாரமான ஞாபகசக்தி என்று அவர்கள் பாராட்டினார்கள். அதே போன்ற பாராட்டுரையை 1979இல் மாயவரத்தில் நடைபெற்ற நாவல் விழாவின்போதும் நான் பெறமுடிந்தது. மாயவரம் அப்போது அந்த ஊர் தனது முன்னைப் பெயரான மயிலாடுதுறை என்பதை மீண்டும் ஏற்றிருக்கவில்லை தெய்வத்தமிழ் மன்றம் தமிழ் நாவல் நூற்றாண்டு விழா'வை 1979இல் கொண்டாடியது. இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்ற விழா அது பெயர் பெற்ற நாவலாசிரியர்கள் அதில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அகிலன், நீல. பத்மநாபன், லா.ச. ராமாமிர்தம், சாண்டில்யன் முதலியவர்கள் நாவல்கள் பற்றிப் பேசினார்கள். சி.சு. செல்லப்பா, கோவை ஞானி, தி.க, சிவசங்கரன் போன்ற விமர்சகர்களும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டார்கள். சரித்திர நாவல்கள் பற்றிப் பேசும்படி என்னைக் கேட்டிருந்தார்கள். பேசினேன். சரித்திர நாவல்கள் என்று பெயர் பண்ணப்படுகிறவை உண்மையில் சரித்திரமும் இல்லை; அவை இலக்கியத்தரமான நாவல்களும் இல்லை. சரித்திரங்களில் இடம்பெற்றுள்ள மன்னர்களின் பெயர்கள், இடங்கள் போன்ற வரலாற்றுப் பெருமை பெற்ற விஷயங்களை வைத்துக் கொண்டு, காதல், உளவு சூழ்ச்சிகள், தந்திர மந்திரங்கள், மர்மங்கள், பாதாளச் சிறை-குகை வழிகள் முதலிய மசாலாக்களைச் சேர்த்து, அதீதக் கற்பனையில் புரட்டி எடுத்துப் பரிமாறப் படுகிற டம்மாத்து வேலைகளே அவை சரித்திர நாவல்கள் என்று எழுதப்படுகிறவற்றில் பெரும்பாலானவை துப்பறியும் மர்மக் கதைகளாகவே பின்னப்பட்டிருக்கின்றன. மாமன்னன் அப்பாவி போல் இருப்பான். அவனுக்கு எதிரான சூழ்ச்சிகள் திட்டங்கள் முதலியன வெற்றிகரமாக நடத்தப்படும்.