பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f383 வாழ்க்கைச் சுவடுகள் இருந்திருந்தால், கோபம் கொண்டு எழுந்து ஆத்திரத்தோடு பதில் கூறியிருப்பார் அவர் அவரது வழக்கமான விளக்கம்தான். இப்படி எல்லாம் எழுதுவது காவிய தர்மம் ஆகும். காளிதாசன் பெண் வர்ணனைகள் எழுதவில்லையா? பவபூதி எழுதவில்லையா? நான் எழுதினால் மட்டும் அது குற்றமா? நாவலும் காவிய வகையைச் சேர்ந்தது தான் என்று கூறியிருப்பார். நாவலாசிரியர் அகிலன் வெகுண்டு சூடாகப் பேச வேண்டிய சந்தர்ப்பம் மாயவரம் நாவல் விழாவில் ஏற்பட்டது. அவ்விழாவின் போது 50 தமிழ் நாவல்கள் 50 கட்டுரைகள்' என்ற தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. அதுவரை வெளிவந்து கவனிப்புப் பெற்றிருந்த ஐம்பது முக்கிய, நாவல்கள் பற்றி ஐம்பது எழுத்தாளர்களிடம் கருத்துக் கட்டுரைகள் வாங்கித் தொகுக்கப்பட்டிருந்தன. தொகுத்தவர் - தமிழ் மன்றத் தலைவர் இரா. இராஜசேகரன். அவற்றில் அகிலன் நாவல்கள் பற்றிச் சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரையும் இருந்தது. சுரா விமர்சன ரீதியில், நையாண்டியாகச் சில வரிகள் rழுதியிருந்தார். புத்தகம் கிடைத்தவுடன் முதலாவதாக அந்தக் கட்டுரையைப் டித்த அகிலனுக்குக் கோபம் வந்து விட்டது. அப்போது அவர் மேடையில் மஜை முன்பாக அமர்ந்திருந்தார். ஆவேசமாக எழுந்து கைகளை வீசிப் பேசலானார். அவர் கைவீசிய வேகத்தில், மேஜை மீதிருந்த சோடாபுட்டி உருண்டு விழுந்து, சோடாநீர் வழிந்து ஓடியது. 'என் நாவலைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார் ஒருவர். அவர் பெரிய எழுத்தாளராம் என்று கேலியாகப் பேசலானார். அவரும் அவர் போன்றவர்களும் எழுதுகிற எழுத்துக்களைச் சில நூறு பேர்தான் படித்து ரசிப்பார்கள். என் எழுத்துக்களை லட்சக்கணக்கான வாசகர்கள் படித்து மகிழ்கிறார்கள். பாராட்டுகிறார்கள். நான் இவர்களைப் போன்ற ஒரு சில விமர்சகர்களின் பலத்தில் எழுத்தாளனாக வளர்ந்திருக்கவில்லை. நாடெங்கிலும் உள்ள பல லட்சம் வாசகர்களின் பலத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறேன். என்னுடைய எழுத்துக்கள் தமிழில் மட்டுமல்ல, இதர பல இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுப் பல மொழி வாசகர்களாலும் விரும்பிப் படிக்கப்படுகின்றன. இன்று கூட எனது நாவல் ஒன்று குஜராத்திமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுப் புத்தகமாக வந்திருக்கிறது. இது தான் அந்தப் புத்தகம் என்று ஒரு புதிய நூலை உயர்த்திப் பிடித்துக் காண்பித்தார். விமர்சனத்தைப் பொறுத்தவரை நம் எழுத்தாளர்களின் மனநிலை இந்த விதமாகத் தான் இருக்கிறது. மிகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களினால் கூட எதிர்ப்படும் விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. விமர்சனங்கள் அவர்களுக்கு எரிச்சல் மூட்டுகிறது. விமர்சனம் என்றால் பாராட்டுரையாகவே அமைய வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். குறை கூறி எழுதினால்,