பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் f{}} எழுதக்கூடியவர்கள் இல்லை என்று அவர் திடமாக நம்பினார். இந்தக் கருத்தை எழுத்திலும் பேச்சிலும் வெளியிட அவர் தயங்கியதில்லை. பின்வந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை அவர் படிக்கவே மறுத்தார். இந்த வகையில் கநா. சுப்ரமண்யம் எவ்வளவோ மேல், அவர் தமிழில் வருகிற புத்தகங்களை வரவேற்றுப் படித்தார் புதிய எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் படிப்பதில் அவர் ஆர்வம் காட்டினார். "எழுத்துப் பத்திரிகையின் தாக்கத்தின்ால், இலக்கிய விமர்சனத்தில் சிலர் ஈடுபட்டனர். பேராசிரியர் சி. கனகசபாபதி தற்கால இலக்கியம் குறித்த விமர்சனக் கட்டுரைகள் எழுதினார். பாரதி, பாரதிதாசன், புதுக்கவிதை பற்றி எல்லாம் அவர் எழுதியுள்ள விமர்சனக் கட்டுரைகள் கவனிப்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியனவாயின. வெங்கட் சாமிநாதன், பிரமிள் என்கிற தருமு சிவராம் இருவரும் எழுத்துக் காலத்திலிருந்து விமர்சனம் எழுதுவதில் தீவிர உற்சாகம் காட்டலாயினர். வெங்கட் சாமிநாதன் எதிர்மறை நோக்கே கொண்டிருந்தார். தமிழ்நாடு இலக்கியப் பாலை: இங்குப் பசுமையான வாழைகள் தோன்றுவதில்லை. இங்கிருப்பவர்களுக்கு சுயசிந்தனை ஆற்றலே கிடையாது என்று உறுதியாக நம்பி, அந்த நோக்குடனேயே விமர்சனத் துறையில் ஈடுபட்டுச் செயலாற்றினார். பெயர் பெற்றிருந்த படைப்பாளிகள் பலரையும் குறைகூறித் தாக்குவதாகவே இருந்தன அவருடைய விமர்சனக் கட்டுரைகள். தருமு. சிவராம் விமர்சனங்களும் அதே தன்மையில்தான் இருந்தன. அவரும் வெங்கட்சாமிநாதனும் ஆரம்பத்தில் பரஸ்பரம் பாராட்டிப் புகழ்ந்து எழுதினார்கள். இதர எழுத்தாளர்கள் பலரையும் தாக்கினார்கள். அதனால், பரபரப்புக் கட்டுரைகள் மூலம் கவனிப்புப் பெற விரும்பிய சிறுபத்திரிகைகள் அநேகம் இவ்விருவருடைய எழுத்துக்களையும் விரும்பி ஏற்று வெளியிட்டன. காலப்போக்கில் இவ்விருவருமே ஒருவரை ஒருவர் தாக்கியும் பழித்தும் நீளம்நீளமான விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதில் மகிழ்ச்சி கண்டார்கள். ஒவ்வொருவரும் முப்பது பக்கங்கள், நாற்பது பக்கங்கள் என்று இந்தரகக் கட்டுரைகளை எழுதினார்கள். தனிப் பிரசுரங்களும் வெளியிட்டார்கள். 1970களில் தமிழில் சிறு பத்திரிகைகள் அதிகமாக வெளிவந்தன. அவற்றில் பல வெங்கட்சாமிநாதன், தருமு சிவராம் இருவரது விமர்சனக் கட்டுரைகளை வெளியிடுவதில் பெருமை கொண்டன. இவ் வகையில் அக்காலகட்டத்திய சிற்றிதழ்களின் பக்கங்களையும் தரத்தையும் கெடுத்த 'புண்ணியம் இந்த இரண்டு பேரையும் சாரும்.