பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 வாழ்க்கைச் சுவடுகள் விமர்சனத் துறையில், மார்க்சியக் கண்ணோட்டத்துடன் இலக்கிய விமர்சனம் செய்வதும் வளர்ந்து வந்தது. இலங்கை இலக்கிய விமர்சகர்களான கலாநிதி க. கைலாசபதி, கலாநிதி சிவத்தம்பி இருவரது தாக்கமும் தமிழ்நாட்டில் வலிமை பெற்றிருந்தது. பேராசிரியர் நா. வானமாமலை மார்க்சியப் பார்வையுடன் ஆழ்ந்த விமர்சனங்கள் எழுதினார். தொ.மு.சி. ரகுநாதனும் இவ்வகையில் சாதனை புரிந்திருக்கிறார். தி.க.சிவசங்கரன் விமர்சனத்துறையில் ஈடுபட்டுக் கவனிப்புக்கு உரியவரானார். பேராசிரியர் நா.வா. மார்க்சிய நோக்கு விமர்சனத்தை வளர்ப்பதற்காகவே ஆராய்ச்சி என்கிற காலாண்டு இதழை நடத்தினார். 'ஆராய்ச்சி என்ற பெயரில் வகுப்புகள் கூட்டி வழிகாட்டினார். அதன் மூலம் ஆராய்ச்சிக் குழு என்று பெயர் பெற்ற திறனாய்வாளர்கள் பலர் உருவாயினர். முனைவர் திசு. நடராஜன், வெ. கிருஷ்ணமூர்த்தி, ஆ. சிவசுப்பிரமணியன் போன்ற ஆய்வாளர்கள் வளர்ந்து நற்பணி புரியலாயினர். என்னை நான் ஓர் இலக்கிய விமர்சகனாகக் கருதுவது இல்லை. நான் விமர்சகன் அல்லன், ரசிகன் - இலக்கிய வாசகன் என்றே சொல்லி வருகிறேன். அவ்விதமே பல இடங்களிலும் குறிப்பிட்டிருக்கிறேன். நான் படித்த புத்தகங்களை இதர வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் தன்மையில், மதிப்புரைகளும் கட்டுரைகளும் மிகுதியாகவே எழுதியுள்ளேன். ஆயினும் நான் சரியான விமர்சகன் இல்லை; அனைத்தையும் அனைவரையும் பாராட்டிக் கொண்டிருக்கிறேன் என்ற குறைகூறல் பலராலும் சொல்லப்பட்டு வருகிறது. பாராட்டுகிற மனம் வேண்டும் பாராட்டப்பட வேண்டியவற்றைப் பாராட்டத் தவறியதாலேயே அநேக நல்ல விஷயங்கள் வளர்ச்சி அடையாமலே போயின என்று மகாகவி பாரதியார் குறிப்பிட்டிருக்கிறார். அவர் காலத்தில் பாரதியாரோடு பழகி, அவரைப் பின்பற்றிய வரா.வும் (வ. ராமஸ்வாமி பாராட்டுவதில் கஞ்சத்தனம் காட்டவில்லை. அவர் எல்லோரையும் தாராளமாகப் பாராட்டுகிறார் என்று மற்றவர்கள் குறை கூறினார்கள். அதற்கு அவர் பதில் சொன்னார் : "ஆமாம். நான் பாராட்டவே செய்கிறேன். எழுந்து, நின்று நடக்க விரும்புகிறவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் நாம் பாராட்டுவது. ஒருவர் செய்வதைப் பாராட்ட மனமில்லாமல், இது சரியில்லை; நீ செய்வது நன்றாகவேயில்லை. உன்னால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாது என்று குறைகூறிக் கொண்டிருந்தால் அவன் வளரமாட்டான். மாறாக, அவனை மனம் திறந்து பாராட்டினால் அவன் உற்சாகம் பெற்று, ஊக்கத்தோடு உழைத்து முன்னேறுவான். நான் எவ்வளவு தான் பாராட்டினாலும், உண்மையான திறமையும் உழைப்பும் இருக்கிறவர்தான் வளர்ச்சி பெறமுடியும். அதற்காக எடுத்த எடுப்பிலேயே, நீ உருப்பட மாட்டே,