பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13.3 வாழ்க்கைச் சுவடுகள் கொண்டார். இலங்கை இலக்கிய விமர்சகர் க. கைலாசபதியும், நான் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி எழுத வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். அதனால் 'தீபம்' இதழில் அந்த வரலாற்றை நான் எழுதினேன். எனவே, இப்போது அக்கட்டுரைகளை கவிஞர் மீரா புத்தகமாக வெளியிட விரும்பியதும், நான் செல்லப்பாவிடம் அதுபற்றிப் பேசினேன். 'இதை எழுத்து பிரசுரமாக வெளியிட வேண்டும் என்றே நான் ஆசைப்படுகிறேன். ஆனாலும் மீரா உடனடியாக இதை வெளியிட்டு விடுவார் என்பதால் நான் அவருக்கு விட்டுக் கொடுக்கிறேன். எப்படியும் இது புத்தகமாக வரவேண்டும். அது தான் முக்கியம்' என்று செல்லப்பா தெரிவித்தார். கவிஞர் மீரா மகிழ்ச்சி அடைந்தார். புத்தகத்தை வெளியிடுவேன் என்று தெரிவித்தார். ஆயினும் சந்தர்ப்பச் சூழ்நிலைகள் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. ஏறக்குறைய ஒரு வருடம் காத்திருந்து விட்டு, மீரா வருத்தத்துடன் எனக்கு எழுதினார், நான் எதிர்பார்த்தபடி இந்த நூலை வெளியிட இயலவில்லை. பல சங்கடங்கள். எனவே, இதை சிசு செல்லப்பாவே வெளியிடட்டும்' என்று. அக்கடிதத்தைச் செல்லப்பாவிடம் தந்தேன். இது எழுத்து பிரசுரமாகத் தான் வெளிவரவேண்டும் என்றிருக்கிறது. இது சீக்கிரம் வந்துவிடும் என்று எண்ணி மீராவே வெளியிடட்டும் என்று இசைந்தேன். அது நடக்கவில்லை. எனக்கே அந்தப் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. எப்படியும் இதை நான் புத்தகமாகக் கொண்டு வருவேன்' என்று செல்லப்பா உறுதியாகச் சொன்னார். அவ்விதமே செய்தார். புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் எழுத்து பிரசுரம் ஆக 1977இல் வெளிவந்தது. வியாபார ரீதியில் புத்தகங்கள் வெளியிடுகிற தொழில் முறைப் பிரகரகர்த்தர்களின் நோக்கையும் போக்கையும் பற்றி இங்குச் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். எழுத்தாளர்கள் என்னதான் பெயர் பெற்றிருந்தாலும், எவ்வளவு ஆழ்ந்த - நல்ல - பயனுள்ள விஷயங்களை எழுதினாலும், அவ் எழுத்துக்கள் புத்தகங்களாகப் பிரசுரம் பெறக்கூடிய வாய்ப்பை எளிதில் பெற்றுவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. அதிகம் விற்பனையாகிற ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதி எழுதிப் பரவலாகப் பெயர் தெரிய வந்துள்ள எழுத்தாளர்களின் எழுத்துக்களை வணிக நோக்கு வெளியீட்டாளர்கள் உடனுக்குடன் புத்தகங்களாக வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவை வாசகர்களின் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. ஜெயகாந்தன் சரஸ்வதி மாத இதழில் நல்ல சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தார். இலக்கிய ரசிகர்களின் கவனிப்பையும் பாராட்டுதல்களையும்