பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 வாழ்க்கைச் சுவடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த அந்த மாநில மொழிக்கெனத் தனி சாகித்ய அகாதமி இயங்குகிறது. தமிழ் நாட்டில் மட்டுமே தமிழ் மொழிக்கான ரீஜனல் சாகித்ய அகாதமி இல்லை. சாகித்ய அகாதமி விருது வழங்கும் விழா, எப்போதும் புது டில்லிலேயே நிகழ்வதற்குப் பதிலாக, ஒவ்வொரு வருடம் வெவ்வேறு மாநிலத் தலைநகரில் நடைபெற ஏற்பாடு செய்வது அந்தந்த மொழிக்கும் மாநிலத்துக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும் என்ற கருத்து எழுந்தது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அது நடைமுறைக்கும் வந்தது. ஒரு வருடம் ஹைதராபாத்தில் விழா நடந்தது. இன்னொரு வருடம் கோவாவில் நடைபெற்றது. 1979இல் ஒரிசா- புவனேஸ்வரத்தில் பின்னர் இந்த வழக்கம் சரிப்பட்டுவரவில்லை என்று கைவிடப்பட்டது. விழா ஏற்பாடுகளை அந்த அந்த மாநில அரசே பொறுப்புடன் ஏற்று நன்கு செய்துமுடித்தன என்றாலும், விழாவைப் புதுடில்லியில் நடத்துவதில் பல நன்மைகள் உண்டு எனக் கண்டு உணரப்பட்டது. புதுடில்லி இந்தியாவின் தலைநகரம். அங்குப் பலமொழி பேசுகிறவர்களும் வசிக்கிறார்கள். பல மாநிலத்தவர்களும் அவரவருக்கெனச் சங்கங்கள் அமைத்திருக்கிறார்கள். அனைத்து மொழிகளின் நூல்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிற விழாவுக்குப் பல மொழிக்காரர்களும் வந்து கலந்து கொள்கிறார்கள். மேலும், ஆங்கிலப் பத்திரிகைகள் பல வெளிவருகின்றன. அவை விழாச் செய்திகளை எடுப்பாகப் பிரசுரிக்கின்றன. அதனால் எங்கும் அவை பரவ வாய்ப்பு கிட்டுகிறது. ரேடியோ, தொலைக்காட்சி மூலமும் விழாச் செய்திகளைப் பரப்புவதற்கு டில்லியில்தான் அதிக வசதிகள் இருக்கின்றன. ஒரு மொழிமாநிலத்தின் தலைநகரில் விழா ஏற்பாடு செய்வதனால், அந்த மொழியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகமாகக் கூடுகிறார்கள். அந்த மொழிப் பத்திரிகைகள்தான் இங்கே இருக்கின்றன. ஆங்கில மொழி இதழ்கள் கூட இருப்பதில்லை. அந்த மாநில மொழிக்கு உரிய சங்கங்கள் மட்டும் உள்ளன. இதர மொழிகளைச் சேர்ந்தவர்கள், அவர்களது அமைப்புகள் அங்கே இல்லாததால், பிற மொழியாளர்கள் எவரும் விழாவுக்கு வர வாய்ப்பில்லை. இவ்வாறு பல சாதகபாதகங்களையும் ஆராய்ந்து இனிமேல் பரிசளிப்பு விழாவைப் புதுடில்லியிலேயே நடத்துவது என்று சாகித்ய அகாதமி பின்னர் முடிவுசெய்தது. அவ்விதமே தொடர்ந்து நடைபெறுகிறது. நான் பரிசு பெற்ற வருடம் புவனேஸ்வரம் போக வேண்டியதாயிற்று. சாகித்ய அகாதமியில் தமிழ் மொழிக்குப் பொறுப்பாளர் (கன்வீனர்’ ஆகப் பதவி வகித்த நா. பார்த்தசாரதியும் உடன் வந்தார். மாநில அரசே பொறுப்பேற்ற சாகித்ய அகாதமிப் பரிசளிப்பு விழாவுக்கு எற்பாடு செய்கிறபோது தங்கள் மாநிலத்துக்குப் பெருமையும் மதிப்பும் கிட்ட