பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 205 வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டியது. அவசியமாகும் என்று இலக்கியச் சிந்தனை கருதியது. அதனால் ஆண்டுக்கு ஒரு படைப்பாளி பற்றி நூல் எழுதச் செய்து, புத்தகமாக்கி, அதையும் ஆண்டு விழாவின் போது வெளியிட்டு வருகிறது. முதலாவதாக, கு. அழகிரிசாமியின் படைப்புகள் பற்றி எழுத்தாளர் என். ஆர். தாசன் நன்கு ஆய்வு செய்து, பெரிய அளவில், சிறப்பான நூல் ஒன்றை எழுதினார். தொடர்ந்து ஜெகசிற்பியன், ந. பிச்சமூர்த்தி, மெளனி, கு.ப. ராஜகோபாலன், ந. சிதம்பரசுப்பிரமணியன், தி.ஜர, வ.ரா, வைமு கோதைநாயகி, எஸ்.வி.வி. என்று அநேக எழுத்தாளர்கள் பற்றிய நூல்களை இலக்கியச் சிந்தனை வெளியிட்டிருக்கிறது. இலக்கியச் சிந்தனையின் பணிகள் போற்றுதலுக்கு உரியவை. இலக்கியச் சிந்தனை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், சிறுகதைக்காக அது வரையறுத்துக் கொண்ட திட்டங்களால் உந்தப்பெற்று. வேடந்தாங்கல் அருகில் உள்ள விநாயகநல்லூர் இனியவன் 'இலக்கிய வீதி'யைத் தொடங்கினார். இந்த அமைப்பும் சிறுகதை எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இலக்கியச் சிந்தனை ஒவ்வொரு மாதமும், பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற சிறுகதைகளில் சிறந்ததைத் தேர்வு செய்யும். ஆனால், இலக்கிய வீதி மாதம் தோறும் புதிதுபுதிதாகக் கதைகள் எழுதி அனுப்பும்படி எழுத்தாளர்களைக் கேட்டுக் கொண்டது. அப்படி வருகிற எழுத்துப் பிரதிகளைப் பரிசீலனை செய்து, சிறந்த கதையை ஒவ்வொரு மாதமும் தேர்வு செய்து இலக்கியக் கூட்டத்தில் தெரியப்படுத்தியது வருடமுடிவில், பன்னிரண்டு சிறுகதைகளையும் தொகுத்து நூலாக்கியது. ஆண்டு விழாவின் போது புத்தகத்தை வெளியிட்டது. இலக்கியச் சிந்தனை தனது மாதாந்தரக் கூட்டங்களையும், ஆண்டு விழாவையும் சென்னையிலேயே நடத்துகிறது. ஆனால், இனியவன் இலக்கிய வீதிக் கூட்டங்களை, பெரும்பாலும் மதுராந்தகம் நகரில் நடத்தியபோதிலும், வெவ்வேறு நகரங்களில் நடத்துவதில் ஆர்வம் காட்டுவது வழக்கம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, தஞ்சாவூர் என்று எங்கு வேண்டுமானாலும் நடத்துவார். ஒருவருடம் புதுதில்லிக்கே சென்று இலக்கிய வீதியின் சிறப்புக்கூட்டத்தை அம்மாநகரில் நடத்தி, சாதனை புரிந்த பெருமை இனியவனுக்கு உண்டு. 33 பயணங்கள் போவதில் நான் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். இந்தியா முழுவதும் கற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது.