பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 2#. சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் கொட்டு மேளத்துடன், பள்ளிக்கு இட்டுச் சென்று 'அண்ணாவி க்கு உரிய மரியாதைகள் செய்து எழுதக் கற்றுக் கொடுக்கப்படும். ஒரு குடிசை, தரையை விட உயரமாகக் கட்டப்பட்ட திண்ணை. அதன் மீது மணல் பரப்பப்பட்டிருக்கும். உரிய பூஜைகள் முடித்து, 'அண்ணாவி’ பையனின் கையைப் பிடித்து விரலால் மணலில் அ, ஆ, முதலிய எழுத்துக்களை எழுதக் கற்றுக் கொடுப்பார். இதற்கு அட்சிராப்பியாசம் என்று பெயர். மணலில் தான் எழுதிப் பழக வேண்டும். 'கற்பலகை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பழக்கமில்லை. ஏடும் எழுத்தாணியும் தான். சில மாதங்கள் அண்ணாவி பள்ளிக்கூடத்தில் எழுத்து கற்றுக்கொண்ட பிறகு, வேறொரு பெரியபள்ளியில் நான் சேர்க்கப்பட்டேன். இங்கு ஸ்லேட்டு குச்சி, புத்தகம் எல்லாம் உண்டு. 1926இல் மீண்டும் இடமாற்றம் ஏற்பட்டது. பூரீவைகுண்டம் அருகில் உள்ள பெருங்குளம் ஊர் போய்ச்சேர்ந்தோம். அங்குள்ள பள்ளிக் கூடத்தில் இரண்டு, மூன்றாம் வகுப்புகளில் நான் படித்தேன். இந்தப் பெருங்குளம் தான் பத்மாவதி சரித்திரம்', 'சத்யானந்தன்' 'கிளாரிந்தா' முதலிய நாவல்களும், குசிகர் குட்டிக் கதைகளும் எழுதிய அ. மாதவய்யாவின் ஊர். இத் தகவலை நான் பிற்காலத்தில்தான் தெரிந்துகொள்ள முடிந்தது. 'இந்த ஊர் மாதவய்யா என்பவரும் சால்ட் அன்ட் எக்ஸைஸ் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர் தான். பிறகு அவர் கதைப் புத்தகங்கள் எழுதிப் பெயர் பெற்றிருக்கிறார் என்று என் அப்பா சொன்னது உண்டு குசிகர் குட்டிக் கதைகள் பழைய பிரதி ஒன்று எங்கள் வீட்டில் ரொம்ப காலம் இருந்தது. மாதவய்யாவின் பஞ்சாமிர்தம்' பத்திரிகையின் ஒன்றிரண்டு இதழ்களும் இருந்தன. பிறகு அவை அழிந்து போயின. 1928 நடுவில் அப்பாவுக்கு மீண்டும் இடமாற்றம் ஏற்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி என்ற ஊருக்கு. தொலைவில் உள்ள அந்த ஊருக்கு எங்களை எல்லாம் கூட்டிச் சென்று வசிக்க வசதிப்படாது என்று அப்பா கருதியதால், நாங்கள் திருநெல்வேலியில் குடிபுகுந்தோம். அப்பா மட்டும் தொண்டிக்கு உத்தியோகம் பார்க்கச் சென்றார். திருநெல்வேலி மந்திரமூர்த்தி உயர்நிலைப் பள்ளியில் நான் நான்காம் வகுப்பு படித்தேன். - தொண்டிக்குப் போன அப்பாவுக்கு அந்த ஊர் ஒத்துக் கொள்ளவில்லை. உடம்பில் கட்டிகள் ஏற்பட்டன. பெரும் பிளவை ஒன்று உண்டாயிற்று. உணவுக் கஷ்டமும், உடல் நோய் சிரமமும் அதிகரிக்கவே அப்பா விடுப்பு