பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைச் சுவடுகள் எடுத்துக் கொண்டு திருநெல்வேலி வந்து சேர்ந்தார். பின்னர் வேலை வேண்டாம் என்று ஓய்வு பெற்றுக் கொண்டார். இனிமேலாவது பிள்ளைகளின் படிப்பு ஒரே இடத்தில் சீராக நடைபெற வேண்டும் என்று தீர்மானித்து, அப்பா பாளையங்கோட்டையில் வசிக்கத் திட்டமிட்டார். அதன்படி நானும் என் சகோதரர்களும் பாளையங்கோட்டை அர்ச் சவேரியர் உயர்நிலைப் பள்ளியில் (செயின்ட் சேவியர்ஸ் ஹைஸ்கூல்) சேர்க்கப்பட்டோம். நான் ஐந்தாம் வகுப்பு முதல் பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) முடிய 1929 - 1936) அந்தப் பள்ளியில் தான் பயின்றேன். நான் ஆறாம் வகுப்பு ( ஃபார்ம்) படித்துக் கொண்டிருந்த போது 1930 என் அட்டா இறந்து போனார். அப்போது எனக்கு வயது பத்து. அந்நாட்களில் ஆறாம் வகுப்பு' என்று சொல்லப்பட்டதில்லை. ஃபார்ம். ஃபார்ம், 11 ஃபார்ம் என்றே கணக்கிடப்பட்டன. பத்தாம் வகுப்பு Vஃபார்ம் என்றும் எஸ்.எஸ்.எல்.சி வகுப்பு W ஃபார்ம் என்றும் பெயர் பெற்றிருந்தன. தமிழ் தவிர இதர பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் தான் கற்பிக்கப்பட்டன. சரித்திரம் இந்திய சரித்திரம், பிரிட்டிஷ் சரித்திரம் என இரண்டு பிரிவுகளில் பெரிய புத்தகங்கள் படித்தாக வேண்டும். அப்போதெல்லாம் மாணவர்களின் படிப்பை எளிமைப்படுத்தும் விதத்தில் கைட் (Guide என்றும் நோட்ஸ் என்றும் சொல்லப்படுகிற துணை நூல்கள் இருந்ததில்லை. நான் ஐந்தாவது ஃபாரம் படித்த வருடத்தில் தான் தமிழ்ப் பாடத்துக்கு முதன் முதலாகக் கோனார் நோட்ஸ் வெளியிடப்பட்டது. நான் நோட்ஸ் துணையை நாடியதில்லை. என் அட்டா இறந்த பிறகு, எங்கள் அம்மாதான் பொறுப்புடன் எங்களை நன்கு வளர்த்துப் படிக்க வைத்தார். அதற்காக எவ்வளவோ சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. என் பெரிய அண்ணா கலியாணசுந்தரம் எட்டாம் வகுப்புடன் படிப்பை முடித்துக் கொண்டார். அண்ணா கோமதிநாயகம் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை 1934இல் எழுதி வெற்றி பெற்றார். 1936இல் நான் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதி முடித்த உடனேயே மார்ச் மாதம் இனி பாளையங்கோட்டையில் வசிக்க வேண்டாம் செலவு அதிகமாகிறது. ராஜவல்லிபுரம் போய் அங்கேயே தங்கலாம் என்று முடிவாயிற்று. என் தம்பி முருகேசன் ஆறாம் வகுப்பு படிக்க வேண்டும், ஊரில் இருந்து திருநெல்வேலி ஜங்ஷன் வந்து இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்கட்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. - பாளையங்கோட்டையில் நாங்கள் வாடகை வீட்டில்தான் குடியிருந்தோம். ராஜவல்லிபுரத்தில் சொந்த வீடு இருந்தது. வயல்களும் இருந்தன. ஆகவே செலவுகள் குறையும் என்று கணக்கிடப் பெற்றது.