பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23ఢ வாழ்க்கைச் சுவடுகள் இந்த இயக்கமே நல்ல நூல்களை வெளியிடவும் முற்படுகிறது. ரஷ்ய நாவலாசிரியர்களையும், லத்தீன் அமெரிக்க இலக்கியப் படைப்பாளிகளையும் தமிழ் வாசகர்களுக்கு அறியச் செய்வதில் ஆர்வமாக உழைத்திருக்கிறது. அத்துடன் வேர்கள் என்ற காலாண்டிதழையும் இவ் இயக்கம் வெளியிடுகிறது. நல்ல படைப்புகள் எந்த மொழியில் வெளிவந்திருப்பினும் அவற்றைத் தமிழில் கொண்டு வரவேண்டும் என்ற ஆசையோடு. சீரிய மொழிபெயர்ப்புகளை இதழ்தோறும் பிரசுரிக்கிறது. புதுமையான சோதனை ரீதியான கதைகள், கவிதைகளையும் வேர்கள் வெளியிட்டு வருகிறது. வேர்கள் இலக்கிய இயக்கம் வெளியீடாக, வல்லிக் கண்ணன் கடிதங்கள் என்ற தொகுப்பு நூலை மிகுந்த சிரமங்களுடன் வருடக் கணக்கில் உழைத்துக் கடிதங்கள் சேகரம் செய்து மு. இராமலிங்கம் பிரசுரித்துள்ளது ஒரு சாதனையாகும். 38 கடித இலக்கியம் என்பதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் ஒன்று, கடித வடிவத்தைப் பயன்படுத்தி உயர்ந்த கொள்கைகள், சிந்தனைகள், ஒருவர் சொல்ல விரும்புகிற விஷயங்களைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தல் போன்ற வகை பண்டித ஜவகர்லால் நேரு தன் மகள் இந்திரா பிரியதர்சனிக்கு எழுதிய கடிதங்கள் இவ்வகைப்பட்டதாகும். - - உலக வரலாற்றையும் இந்தியாவின் சிறப்புகளையும் வரலாற்றுப் பெருமைகளையும் நேருஜி கடித உருவத்தில் எழுதி மகளுக்கு அனுப்பினார். அவை பின்னர் நூலாக வந்தன. அவற்றின் தாக்கத்தால், தமிழ் நாட்டின் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தம் மகளுக்கு அம் மாதிரிக் கடிதங்கள் எழுதி, புத்தகமாக வெளியிட்டார். மு.வ. எனப் பெயர் பெற்றிருந்த மு.வரதராசனார் உயர்ந்த சிந்தனைகளையும் நற்கருத்துக்களையும் வாசகர்கள் மனசில் பதியவைக்கும் முறையில் கடிதங்களாக எழுதினார். திராவிட இயக்கத் தலைவர் சி.என் அண்ணாதுரை - அறிஞர் அண்ணா - அவர் சொல்ல விரும்பிய எண்ணங்கள் பலவற்றையும் தம்பிக்கு என்று கடிதங்களாகத் தீட்டினார். அவரைப் பின்பற்றிக் கலைஞர் கருணாநிதியும் அழகிய தமிழ் St Pe p தம்பிக்கு மிக அதிகமாகவே கருத்துக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். இவை எல்லாம் கடித இலக்கியம் எனக் கருதப்பட்ட போதிலும் உண்மையான கடிதங்கள் ஆகா. கடிதக் கட்டுரைகளேயாகும் அவை, கட்டுரையாக எழுதப்பட வேண்டிய கருத்துக்களை, நேரடியாக வாசகர் மனசில் பதியவைப்பதற்காக, நேரே பேசுவது போல் கடிதங்களாக எழுதும் முறை இது