பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2筑引 வாழ்க்கைச் சுவடுகள் தமிழக அரசு அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்குகிறது. அநேகர் அதைப் பெற்றுப் பலனடைகிறார்கள்: நீங்களும் அதற்கு மனுச்செய்து உதவிப் பணம் பெறலாமே என்று அடிக்கடி நண்பர்கள் என்னிடம் கூறுவது வழக்கம். நான் அதை விரும்பியதில்லை. ஒருசமயம் நண்பர் நா. பார்த்தசாரதி அரசின் உதவித் தொகையைப் பெறுவது பற்றி என்னிடம் பேசினார். அப்போது கு. ராஜவேலு உதவிப்பணம் வழங்கும் பொறுப்பில் இருந்தார். நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன். உரியமுறையில் நீங்கள் மனுச் செய்தால் எளிதில் அங்கீகரிக்கப்பட்டுவிடும் என்று நாபா கூறினார். எனக்கு உதவி தேவை என்று கோரிக்கை மனு அனுப்ப நான் விரும்பவில்லை என்றேன். மாதம் தோறும் நூற்றைம்பது ரூபாய் கிடைக்கும். அது உங்களுக்கு ஏதாவது செலவுக்கு உதவுமல்லவா? என்று நண்பர் குறிப்பிட்டார். அக்காலத்தில் நூற்றைம்பது ரூபாய்தான் உதவித் தொகையாக அளிக்கப்பட்டு வந்தது. பின்னர்தான் அது நானூறு ஆக உயர்த்தப்பெற்றது. நூற்றைம்பது ரூபாய் தானே அது அவனுடைய காப்பிச் செலவுக்கே பற்றாது. அதற்கு மனுச் செய்ய வேண்டாம் என்று என் அண்ணா கூறிவிட்டார். அதன் பிறகு நா.பா. அது பற்றிப் பேசவில்லை. அண்ணா இறந்துவிட்ட பிறகு நண்பர்கள் பலர் அரசின் உதவிப்பணம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள், எனக்காகத் தான். நான் வயது முதிர்ந்த எழுத்தாளன், வறுமையால் கஷ்டப்படுகிறேன், உதவி தேவை என்ற மனு எழுதி, அதற்குத் தாசில்தார் சான்று பெற்று அலைய வேண்டும். இதெல்லாம் வேண்டாத வேலைகள் என்று நான் சொல்லி வந்தேன். ஆயினும் நண்பர்கள் பின்வாங்கவில்லை. பேராசிரியர் மலையமான் பெரிதும் முயன்று உரிய பாரத்தை எனக்காகப் பூர்த்தி செய்து அவரே வட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அலைந்து உரிய சான்றுக் கையெழுத்துப் பெற்று. முறைப்படி மனுவை உரிய அலுவலகத்தில் சேர்ப்பித்து உதவி புரிந்தார். அது சம்பந்தமாகப் பின்னர் நான் கல்லூரிச் சாலையில் உள்ள அலுவலகத்துக்கு மூன்று நான்கு தடவைகள் அலைய வேண்டியதாயிற்று. போதுமான தாமதங்களுக்குப் பிறகு எனக்கு மாதம் நானுறு ரூபாய் உதவிப் பணம் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டது. மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மனுச் செய்து புதுப்பிக்க வேண்டும் என்ற விதியும் அறிவிக்கப்பட்டது. ஒரு தடவை தாசில்தார் சான்று