பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 வாழ்க்கைச் சுவடுகள் திருப்பூர் கிருஷ்ணன் முக்கியமான நண்பர்களில் ஒருவர். 'தீபம்' பத்திரிகை காலத்தில் அறிமுகமானவர். அதன் பிறகு அவர் தினமணியில் சேர்ந்து பல வருடங்கள் பணிபுரிந்தார். பின்னர் அம்பலம் என்கிற மின் இணைய இதழில் ஆசிரியராகச் செயலாற்றினார். தற்சமயம் 'சென்னை ஆன் லைன் என்ற இணைய இதழில் ஆசிரியராக இருக்கிறார். பன்முக ஆற்றல் பெற்றவர். நல்ல சிறுகதைகள், ரசமான கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் எழுதக் கூடியவர். அருமையான பேச்சாளர். சிறந்த பண்பாளர். நண்பர்களிடம் அன்பும் பாசமும் காட்டும் நல்ல மனிதர். தீபம் இலக்கியக் குடும்பத்தைச் சேர்ந்த அ.நா. பாலகிருஷ்ணன் இலக்கியவாதிகளின் நண்பர். நா. பார்த்தசாரதியிடம் அன்பும் அபிமானமும், மதிப்பும் மரியாதையும் கொண்டவர். நா.பா.வின் மறைவுக்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் அவரது நினைவு நாளைத் தமது சொந்தப் பொறுப்பில் நடத்துகிற இலக்கிய அபிமானி, நா.பா.வின் நினைவை நிலை நிறுத்துவதற்காக, தீபம் இதழின் வரலாற்றை என்னைக் கொண்டு எழுதுவித்து, தீபம் யுகம் என்ற நூலாக வெளியிட்டவர். என்மீது மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டிருக்கிற இனிய நண்பர். எனது எண்டாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடத் தீவிரமாக முனைந்து, மயிலாப்பூர் வித்யாபவன் அரங்கில் சிறப்பாக 'முத்துவிழா ஏற்பாடுசெய்து நடத்தினார். அச்சமயம் 'சிறியன சிந்தியாதான்வல்லிக்கண்ணன்' என்ற தொகுப்பு நூலை உயர்ந்தமுறையில் தயாரித்து வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தினார். செ. யோகநாதன் ஈழத்தமிழ் எழுத்தாளர். அவர் தமிழ்நாட்டுக்கு வந்த புதிதில், பாளையங்கோட்டை பேராசிரியர் நா. வானமாமலை வீட்டில் எனக்கும் தி.க.சி.க்கும் அறிமுகமானார். அன்றிலிருந்து நட்பைப் பேணிவளர்க்கும் பண்பாளராக விளங்குகிறார். சிறுகதை, நாவல், குழந்தை இலக்கியம், சினிமா பற்றிய கட்டுரைகள், விமர்சனம் எனப் பல துறைகளிலும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இலங்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எட்டுப் பாக நாவல் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு அதன் முதல் பகுதியைப் பிரசுரித்துள்ளார். கடுமையான உழைப்பாளி. மூன்று வருடங்களுக்கு முன்பு இதயநோய் கண்டு, அறுவை சிகிச்சை பெற்றபின் மீண்டும் இலங்கை போயிருக்கிற இனிய நண்பர். அவ்வப்போது எனக்குக் கடிதம் எழுதுகிறார். தேவகாந்தன் மற்றொரு ஈழத்தமிழ் எழுத்தாளர். விசேஷமாகக் குறிப்பிடத் தகுந்தவர். கனமான குறுநாவல்கள் சிறுகதைகள் எழுதியிருப்பவர். இலங்கை வரலாற்றையும் விடுதலை இயக்கம் சார்ந்தவர்களையும் ஆதாரமாக வைத்து, கனவுச் சிறை எனும் ஐந்து பாக நாவலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதன் மூன்று பகுதிகளை எழுதிப் பிரசுரித்திருக்கிறார். இலக்கு என்னும் சிறப்பான காலாண்டிதழை இரண்டு வருடங்கள் நடத்திய நல்ல நண்பர்.