பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 281 தெரிந்துகொள்வது மனோகரமான இனிய அனுபவங்கள் ஆகின்றன. அறியவேண்டும்-மேலும் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவாவுகிற மனம் படிப்பதில் அலுப்போ சலிப்போ கொள்வது சாத்தியமில்லை. நான் வாழ்க்கையில் அவசியம் செய்ய வேண்டும் என்று எண்ணியும் செய்ய முடியாமல் போன காரியங்கள் ஏதோனும் உண்டா? இதுவும் என்னிடம் கேட்கப்படுகிற கேள்விதான். உண்டு. நான் முக்கியமாக இரண்டு நாவல்கள் எழுத வேண்டும் என்று எண்ணம் வளர்த்தேன். ஒன்று தனிமனிதன் சம்பந்தப்பட்டது. மற்றது சமூகம்-நாடு-மனிதர்கள் பற்றியது. ஒருவன் லட்சியவாதி. தனக்கெனத் தனிக்குறிக்கோளும் கொள்கைகளும் கொண்டு வாழ்கிறான். சிரமங்கள் அனுபவிக்கிறான். செல்வாக்கோ வாழ்க்கை வசதிகளோ பெறுவதில்லை. அவனோடு பழகிய ஒருவன் எப்படியும் வாழலாம் சுகபோகங்களை அனுபவித்து இன்புறுவதுதான் நிறைவான வாழ்க்கை அதற்காக எவ்வழியிலும் செல்வம் சேர்க்கலாம், பிறரை எவ்வகையிலும் தனது சுயநலத்துக்காகப் பயன்படுத்தலாம். பிறகு அவர்களை ஒதுக்கித் தள்ளலாம் என்ற நோக்குடன் வாழ்கிறான். பிரபலமடைகிறான். பிறர் நோக்கில் அவனே வெற்றியாளன் எனக் கருதப்படுகிறான். இவன் லட்சியவாதியை மட்டமாக மதிக்கிறான். லட்சியவாதி இவனை அல்பமாகக் கருதுகிறான். உண்மையில் எவர் நோக்குச் சரியானதாகும்? இதை அலசி ஆராயும் ஒரு நாவல். இருவரது எண்ணங்கள். மன ஓட்டங்கள், அனுபவங்களை விவரிப்பது. இன்னொரு நாவல் காலம் மாறுதல்களை விதைத்தவாறு நகர்ந்து கொண்டேயிருக்கிறது. தனிமனிதர், சமூகம், நாடு, உலகம் எங்கும் எத்தனை எத்தனையோ மாற்றங்கள். சென்ற அறுபது எழுபது வருடங்களிலேயே தமிழ் நாட்டில் மட்டுமே எத்தகைய மாற்றங்கள் உயர்வாக உச்சத்தில் இருந்த சில இனங்கள் காலவேகத்தில் சரிந்து தாழ்ந்து போயின. தாழ்ந்த நிலையில் இருந்த சில இனங்கள் உயர்நிலைக்கு வந்துள்ளன. சமூக மதிப்புகளிலும் பலவிதமான மாறுதல்கள். ஒரு காலத்தில், நாடகத்தில் நடிப்பவர்கள் கூத்தாடிகள் என்று கருதப்பட்டார்கள். ஒழுக்கக்கேடர்கள் என்று கருதப்பட்டு ஊர்களில் அவர்கள் தங்குவதற்கு வாடகைக்கு வீடுகள் கொடுக்க மறுத்தார்கள் மக்கள். ஆனால், கால ஒட்டத்தில், பெரும் மாறுதல்கள் விளைந்துள்ளன. நடிகர்களுக்குப் பெரும் மதிப்பு நடிகர்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக வருவதும் அனுபவ சாத்தியமாகியுள்ளது.