பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 2蟹3 கடிதங்கள் அனுப்ப அவர் தவறியதேயில்லை. எனது அறுபது எழுபது. எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். என்று தீர்மானித்துத் திட்டங்கள் தீட்டி முன்முயற்சி எடுத்து அவர் ஆவன செய்ததை மறக்கவே முடியாது. மணி விழா, சென்னை லஸ்சில் உள்ள சீனிவாச சாஸ்திரி ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. எழுத்தாளர்கள். பத்திரிகைத்துறை நண்பர்கள் பலரும் வாழ்த்திப் பேசினார்கள். திருநெல்வேலியிலும், வேறு சில இடங்களிலும் சிறிய அளவில் விழாக்கள் நடத்தி நண்பர்கள் என்னைப் பெருமைப்படுத்தினார்கள். பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரித் தமிழ்த்துறையைச் சேர்ந்த 'சிவசு என்கிற சிவசுப்பிரமணியன் தனிச்சிறப்புடைய ஒரு காரியம் செய்தார். அறுபது கேள்விகள் தயாரித்து, அவற்றுக்கு உரிய பதில்களை விரிவாக எழுதித் தரும்படி கேட்டு வாங்கி, அவற்றைக் காலத்தின் குரல் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். அந்த நூல் நல்ல கவனிப்பைப் பெற்றது. சிவசு தான் இலக்கியத் தேடல் எனும் பெயரில் பதிப்பகம் ஆரம்பித்து, எனது சரஸ்வதி காலம் கட்டுரைகளையும் புத்தகமாக்கி வெளியிட்டிருந்தார். அந்த நூலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மணிவிழா சந்தர்ப்பத்தில் வேறு இரண்டு புத்தகங்களும் பிரசுரமாயின. சென்னை பூம்புகார் பதிப்பகம் என்னிடமிருந்து இரண்டு நாவல்களின் எழுத்துப் பிரதியை வாங்கி வைத்திருந்தது. இரண்டு மூன்று வருடங்களாக அவற்றைப் பிரசுரிக்காமலே கிடப்பில் போட்டிருந்தது. மணிவிழாவருடத்தில் அவற்றை நூல்களாக வெளியிடப் பதிப்பகம் முன்வந்தது. 'நினைவுச் சரம்' 'அலை மோதும் கடல் ஓரத்தில் என்ற நாவல்களே அவை. காலஓட்டத்தில், ஊர்களில், சுற்றுப்புறங்களில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு விடுகின்றன. ஆனாலும் மனிதர்களின் குணங்களிலும் போக்குகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. இதை மயிலேறும் பெருமாள் என்பவரின் நினைவுகள் மூலமாகச் சுட்டுவதே நினைவுச்சரம். "அலைமோதும் கடல் ஓரத்தில் ஓர் அப்பாவி மனிதனின் அனுபவக் கசப்புகளை அவனது எண்ணங்கள் வாயிலாக வெளிப்படுத்துகிற நாவல், சோதனை ரீதியில் அமைந்தது. அவன்-அவள்-அவர்கள் என்ற மூன்று பகுதிகள் தான். ஓர் இரவில் கடலோரத்தில் நிகழ்வதாக உள்ளது. அவர்களின் எண்ணங்கள். பேச்சு செயல்கள், சிந்தனை ஓட்டத்தோடும் நடை வளத்தோடும் சொல்லப்பட்டிருக்கின்றன. - இவ் இரு நாவல்களும் இலக்கிய ரசிகர்களிடமிருந்து பெரும் பாராட்டுகளைப் பெற்றுத்தந்த போதிலும், அவை பெற்றிருக்க வேண்டிய கவனிப்பைப் பெறவில்லை என்பது குறைபாடுதான்.