பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வாழ்க்கைச் சுவடுகள் மின்விளக்குகள் வந்தன. திருநெல்வேலி தூத்துக்குடி எலெக்ட்ரிக் சப்ளையிங் கார்ப்பொரேஷன்' எனும் தனியார் நிறுவனம் அப்பணியை ஏற்றுச் செயல்புரிந்தது. தெருக்கள்தோறும் நின்ற கல்தூண் விளக்குகள் போய், மின்விளக்குக் கம்பங்கள் காட்சி அளித்தன. கடைகள், வசதியுள்ளவர் வீடுகளில் மின் விளக்குகள் ஒளிவீசத் தொடங்கின. நான் எப்பவும் போல் குத்துவிளக்கு அரிக்கன் லாந்தர் ஒளியில்தான் படித்துக் கொண்டிருந்தேன் வெகுகாலம் வரை. அந் நாட்களில் ஆண்களும், தலைமுடியை நீளமாக வளர்ப்பது இயல்பாக இருந்தது. பெரியவர்களும், பையன்களும் குஞ்சி அழகுடன் காட்சி அளித்தார்கள். பெரியவர்கள் கொண்டை முடிந்து கொள்வதும், சிறுவர்களுக்குத் தாய்மார்கள் தலை சீவிப் பின்னிவிடுவதும் சகஜமாக விளங்கியது. புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் கிறிஸ்தவர் அல்லாத ஆசிரியர்கள் பெரும்பான்மையினர் நீண்ட தலைமுடியைக் கொண்டை போட்டுக் கொண்டு வந்தார்கள். 1932க்குப் பிறகு ஒவ்வொருவராக, தலைமுடியை வெட்டி க்ராப்' வைக்கலானார்கள். முதலில் ஒரு ஆசிரியர் துணிந்து வழி காட்டினார். அதன்பிறகு ஒவ்வொருவராக க்ராப் தலையினராக மாறினார்கள். 1936இல் குடுமி வைத்த ஆசிரியர் எவருமிலர் என்ற நிலை வந்தது. நானும் எட்டாம் வகுப்பு வரை நீண்ட தலைமுடியுடன்தான் காணப்பட்டேன். எட்டாம் வகுப்பு இறுதியில் 1933இல் என் தலைமுடியும் குறுகத்தறிக்கப்பட்டது. - அக்காலத்தில் நாடகம் தான் முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருநெல்வேலியில் இரண்டு நாடக அரங்குகள் இருந்தன. அடிக்கடி நாடகக் கம்பெனிகள் அங்கு முகாமிட்டு நாடகங்கள் நடத்துவது வழக்கம், அனைத்து நாடகக் குழுக்களும் நீளம் நீளமான பெயரை வைத்துக் கொள்வதோடு முன்னால் மதுரை' என்று இணைத்துக் கொள்வதும் ஒரு மரபாக இருந்தது. மதுரை மீனலோசனி தத்துவ வித்தக சங்கீத நாடக சபை, மதுரை பூரீ தேவி பால வினோத சங்கீத நாடக சபை என்பது போல. அந்நாட்களில் தமிழ்நாட்டில் கன்னையா கம்பெனி என்று பெயர் பெற்றிருந்த நாடக சபை கீர்த்தி வாய்ந்து விளங்கியது. கம்பெனி உரிமையாளர் கன்னையா பக்திமான். தெய்வபக்தி நிறைந்த நாடகங்களையே நடத்தினார். பெரிய நாடகங்கள், வசீகரிக்கும் காட்சி ஜோடனைகள், திடீர் திடீரென மாறும் காட்சி அமைப்புகள் (டர்னிங் லீன்ஸ்), மின்னொளி விந்தைகள் எல்லாம் அவர் நாடகங்களில் இடம் பெறும். ஒரு புதிய நாடகத்தை மேடை ஏற்றினால், சென்னையில் அதைப் பல மாதங்கள் நடத்திக் காட்டிய பிறகு, கன்னையா கம்பெனி தமிழ்நாடு நெடுகிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு