பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 வாழ்க்கைச் சுவடுகள் தமிழ்நாட்டில் கல்வி கற்க விரும்புகிற-மேல்படிப்புக்குத் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு உரிய கல்வி வாய்ப்புகள் கிடைப்பது கூட மிகச் சிரமமான காரியமாகவே இருக்கிறது. 43 குடும்பத்தேர் இயல்பான கதியில் எப்போதும் முன் நகர்ந்துகொண்டே இருக்கிறது. பொறுப்பாக இருந்து அதை நிர்வகிக்கும் முத்தவர் மறைந்து போயினும் குடுமிடத்தின் அலுவல்கள் சீராக இயங்கும்படி இருக்கிறவர்கள் பொறுப்புடன் செயலாற்றுவார்கள் அண்ணாவின் குடும்பத்தின் நிலைமையும் அதுவே. பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்தவிகள் வளர்ந்திருந்தார்கள். அப்பாவின் நற்பண்புகளும் உழைக்கும் மனப்பண்பும் அவர்களிடமும் படிந்துள்ளன. தற்கால - இளையவர்கள் பெரும்பாலோரைப் போலப் பொறுப்பற்றதனமும் உல்லாச மோகமும் ஆடம்பரநாட்டமும் வீண்பொழுதுபோக்கும் இயல்பும் அவர்களிடம் இல்லை. அவரவர் வேலைகளை அவர்கள் ஒழுங்காகச் செய்து ஒற்றுமையாக இருக்கிறார்கள். பேராசைப் படாமல், உள்ளதைக் கொண்டே உளமகிழ்ச்சியோடு வாழும் தன்மையை அவர்களும் பெற்றிருக்கிறார்கள். என்னிடம் மிகுந்த பற்றுதலும் பாசமும் கொண்டிருக்கிறார்கள். ஆகவே குடும்ப வாழ்க்கை சீராகப் போகிறது. அண்ணியும் பொறுப்புடனும் பொறுமையோடும் உழைப்பாற்றலோடும் அனைத்து அலுவல்களையும் கவனித்து, பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மனக்குறையின்றிக் குடும்பத்தை நிர்வகிக்கிறார். அண்ணா இறந்ததும், அவர் குடும்பத்தின் பொறுப்பு என்கிற பெரும் சுமை என்மீது படிந்துவிட்டதாக என் நண்பர்களும் மற்றவர்களும் கருதினார்கள். என்மீது அனுதாபம் கொண்டார்கள். பொருளாதார ரீதியில் எனக்கு உதவவேண்டும் என்று கருதினார்கள். ஆகவே எழுத்தாள நண்பர்கள் பெரிதும் முயன்று நிதிவசூல் செய்து ஒரு விழா ஏற்பாடு செய்து முப்பத்தையாயிரம் ரூபாயை அன்புடன் என்னிடம் தந்தார்கள். அவர்களது அன்பும் பண்பும் உதவிபுரியும் மனமும் என்னை உளம் நெகிழச் செய்தன. அதன்பிறகு எனக்கு நிதி உதவி கிடைத்தவாறிருந்தது. நண்பர்கள் தமிழ்ப்புத்தகாலயம் அகிலன் கண்ணனும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் முத்துக்குமாரசுவாமியும் முயன்று. 1992 ஜனவரியில் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் என்னைப் பாராட்டி இரண்டாயிரம் ரூபாய் நிதி உதவினர்.