பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 翌5溶 அவ்வப்போது என் புத்தகங்கள் பிரசுரம் பெற்றுக்கொண்டிருந்ததும் எனது மகிழ்ச்சியை அதிகப்படுத்தியது டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ் என் சிறுகதைகள் சிலவற்றை 'அருமையான துணை என்ற தொகுப்பு ஆகவும், மூன்று குறுநாவல்களை 'மன்னிக்கத் தெரியாதவர்' எனும் நூலாகவும், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியீடுகளாகப் பிரசுரித்தார். 'தீபம்' இதழில் தொடர்ந்து வெளிவந்த தமிழில் சிறு பத்திரிகைகள் கட்டுரைகளைக் குழ. கதிரேசன் ஐந்திணைப் பதிப்பகம் வெளியீடாக நூலாக்கினார். பூங்கொடி பிரசுரம் சுப்பையா என் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து 'மனிதர்கள் என்ற பெயரில் புத்தகமாக்கினார். குறிஞ்சிப்பாடி மணியன் பதிப்பகம் நண்பர் சம்பந்தன் என் கதைகளை வல்லிக்கண்ணன் கதைகள்' என்ற பெயரில் வெளியிட்டார். ஏற்கனவே 1954இல் கயிலைப் பதிப்பகம் வல்லிக்கண்ணன் கதைகள்' என்றொரு சிறு நூல் வெளியிட்டுள்ளது. அதில் இல்லாத சிறுகதைகள்தான் மணியன் பதிப்பகம் வெளியீட்டில் இடம் பெற்றுள்ளன. வியாபார விளம்பரக் கவர்ச்சிக்காகப் பதிப்பக நண்பர் இந்தப் பெயரைத் தேர்ந்துகொண்டார். இவற்றுடன் நேஷனல் புக்ட்ரஸ்ட் ஆர்மேனியன் சிறுகதைகள்' தொகுப்பையும் 1991இல் தான் கொண்டுவந்தது. எட்டு வருடங்களுக்கு முன்பு நான் மொழிபெயர்த்துக் கொடுத்த கதைகள். ஆர்மேனிய எழுத்தாளர்கள் பலர் எழுதிய அருமையான சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இப்படி 1991 பலநூல்கள் வெளிவந்த காலகட்டமாக அமைந்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நான் வழக்கம்போல் வெளியூர்களுக்குப் போய் வந்து கொண்டுதான் இருந்தேன். வருடம் தோறும் ராஜவல்லிபுரம் போய், அங்கிருந்த பெரிய வீட்டில் ஓரிரு மாதங்கள் தங்கி, அவ்வீட்டின் தனிமையையும் அமைதியையும், தாமிரவர்ணி ஆற்றுக் குளிப்பையும் அனுபவித்து மகிழ்வதை என் வாழ்க்கை முறைகளில் ஒன்றாகக் கொண்டிருந்தேன். அந்தப் பெரிய வீடு திருநெல்வேலி அல்லது பாளையங்கோட்டை நகரில் இருந்தால் பலநூறு ரூபாய் வாடகை பெற்றுத்தரும் விற்பதென்றால், அதன் மதிப்பு அநேக லட்சங்களாகவும் இருக்கும். - ஆனால் ராஜவல்லிபுரம் கிராமத்தில் அது ஐம்பது ரூபாய் வாடகை கூடப் பெற்றுத் தர முடியாது. அச்சிற்றுர் வளர்ச்சி இல்லாத நிலையிலேயே, மாற்றங்களற்று இருந்தது. பக்கத்தில் இரண்டு மைல்களுக்கு அப்பால் உள்ள