பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வாழ்க்கைச் சுவடுகள் காணவே முடியாத காலம் அது. அந்நிலையில்-1932இல் பாளையங்கோட்டைக்கு ஆகாய விமானம் ஒன்று வந்தது. பழங்கால மாடல் விமானம் நகரத்துக்குக் கிழக்கே இருந்த ஹைகிரவுண்ட் எனப் பெயர் பெற்ற திறந்த வெளி மேட்டு நிலத்தில் வந்து நின்றது அது. அதைக் கண்டு களிப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றார்கள். தேர்த் திருவிழா பார்க்கப் போவது போல் அண்டை அயல் கிராமங்களில் இருந்தெல்லாம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தார்கள். கூடுகின்ற கூட்டத்தைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்கள் காசு வசூலிப்பதில் கருத்தாகிவிட்டார்கள். விமானம் நின்ற இடத்தில் ஒரு சதுரத்துக்குக் கம்பி வேலி அமைத்தார்கள். கூட்டம் வெளியே நின்று பார்க்கலாம். உள்ளே போய், விமானத்தை மிக அருகில் நின்றும், தொட்டும் பார்ப்பதற்கு ஒரு ரூபாய் கட்டணம் தர வேண்டும் என்று வசூலித்தார்கள். ஐந்து ரூபாய் கொடுத்தால், விமானத்தில் உள்ளே ஏறிப் பார்த்து, உட்கார்ந்து ரசிக்கலாம். பத்து ரூபாய் கட்டணம் செலுத்துகிறவர்கள் விமான சவாரி செய்யலாம். பாளையங்கோட்டை ஹைகிரவுண்டிலிருந்து மேற்கே பேட்டை வரை வானில் பறந்து திரும்பலாம். ஆண்களும், பெண்களுமாக அதிகம் பேர் அப்படி அனுபவித்து மகிழ்வதில் ஆர்வம் காட்டினார்கள். அந்த விமானம் ஒரு வார காலம் அங்கே தங்கியிருந்தது. ஊர் மக்களுக்கு நல்ல பொழுது போக்காகவும், விமானக்காரனுக்குக் கணிசமான பண வருவாய் பெற்றுத் தருவதாகவும் அது அமைந்தது. அக் காலத்தில் ரேடியோ வந்திருக்கவில்லை. எங்கும் கிராமபோன்தான் ஆட்சி புரிந்தது. ஆரம்ப காலத்தில் அது போனகிராப்' எனப் பெயர் பெற்றிருந்தது. கிராமங்களில் மக்கள் பூனக்கிராப் பெட்டி' என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள், ஊமத்தம்பூ வடிவப் பெரியகுழாய் பொருத்தப்பெற்ற கிராமபோன் பெட்டிகள் அந்தஸ்தின் சின்னமாக விளங்கிக் கொண்டிருந்த காலம். நவயுக மாடல் பெட்டிகள் பின்னர் தான் வந்தன. பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் கிராமபோன் விற்பனைக் கடை ஒன்று இருந்தது. அங்கு எப்போதும் இசைத் தட்டுகளைப் பாட விட்டு விளம்பரப்படுத்துவது வழக்கம், நாங்கள் பள்ளிக்கூடம் போகிற போதும் வருகிற போதும் சற்று நின்று பாட்டு கேட்பது உண்டு. சினிமா அக்காலத்தில்தான் பரவத் தொடங்கியது. திருநெல்வேலியில் முதன்முதலில் ஒரு ரைஸ்மில் கட்டிடம் சினிமா தியேட்டராக மாற்றி அமைக்கப்பட்டது. அங்குப் பேசாப் படங்கள் காட்டப் பெற்றன. மக்கள் மத்தியில் ஊமைப் படங்கள்' என்று அவை குறிப்பிடப்பட்டன. இங்கிலீஷ் படங்களும் பின்னர் இந்திப் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. பார்க்கிறவர்களுக்குப் படம் புரிய வேண்டும் என்பதற்காக, கதையையும்