பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 35 உரையாடலையும் உரத்த குரலில் தமிழில் ஒரு ஆள் விளக்கிக் கூறிக் கொண்டிருப்பார். அப்படிக் கதை சொல்கிறவர் அவர் இஷ்டத்துக்கு அடித்து விளாசி மக்களை ரசிக்க வைப்பார். பேசும் படங்களும் தமிழ்ப் படங்களும் வரத் தொடங்கியதும் விவரித்துச் சொல்லும் கதைசொல்லி காணாமல் போனார். 6 எட்டாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே நானும் கதைகள் எழுத வேண்டும் என்ற நினைப்பு என்னுள் கிளர்ந்தெழுந்தது. ஆயினும் பள்ளிப் பருவத்தின் நான் எழுதத் தொடங்கவில்லை. படித்த புத்தகங்களும் பத்திரிகைகளும் அந்த எண்ணத்தைத் துண்டி வளர்த்துவந்தன. பள்ளிப்படிப்பை முடித்து விட்டு ராஜவல்லிபுரம் சேர்ந்த பிறகும் அண்ணாவின் நண்பனிடமிருந்து ஆனந்த விகடன், மைமேகஸின் இதழ்களை இரவல் வாங்கி வாசித்து வந்தோம். அவற்றைப் பெறுவதற்கென்றே பத்து நாட்களுக்கு ஒரு முறை பாளையங்கோட்டைக்குச் சென்று வந்தோம். போக நான்கு மைல்கள், வர நான்கு மைல்கள், ஆக எட்டு மைல்கள் நடை. அது சிரமமாகத் தோன்றியதில்லை. இனிய பொழுதுபோக்காகவே அமைந்திருந்தது. சிறிது காலத்தில் நண்பன் வீட்டில் தகராறுகளும், இடைஞ்சல்களும் ஏற்பட்டதால், எங்களுக்குப் பத்திரிகைகள் தர அவன் தயங்கினான். அவன் நிலைமையைப் புரிந்துகொண்டு அப்புறம் நாங்கள் அவன் வீட்டுக்குப் போகவில்லை. நாமே விகடன் வாங்கலாம் என்று தீர்மானித்தோம். அதற்காக வாரம்தோறும் சனிக்கிழமை பிற்பகலில் திருநெல்வேலி ஜங்ஷன் போய் வந்தோம். ஆற்றங்கரைப் பாதை மூன்று மைல் தூரம் போக வர ஆறு மைல்கள். சனிக்கிழமை பிற்பகல் ஒன்றரை மணி சுமாருக்கு ரயிலில் ஏஜண்டுக்கு விகடன் பார்சல் வந்து சேரும். இரண்டு மணி வாக்கில் அவர் கடையில் விகடன் இதழ் வாங்கிக் கொண்டு, மெதுவாக நடந்து வந்து, செப்டறை ஆற்றை (ராஜவல்லிபுரம் ஊரை அடுத்துள்ள பகுதி அடைந்ததும் புல்தரையில் அமர்ந்து முக்கிய விஷயங்களைப் படித்து மகிழ்வோம். அந்நாட்களில் 'கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியின் சிறப்பான சிறுகதைகள் விகடனில் வெளிவந்து கொண்டிருந்தன. மயிலைக் காளை, பவானி பி.ஏ.பி.எல், திருவழுந்தூர் சிவக்கொழுந்து போன்ற சுவாரசியமான கதைகள். கள்வனின் காதலி தொடர் கதை வந்தது. மற்றும் சிலர் எழுதிய நல்ல கதைகளும் இருக்கும், பியூரீ கம்ப சித்திரங்கள் என்ற தலைப்பில், கம்பராமாயணம் பற்றிய கட்டுரைகளை இலக்கிய நயத்தோடு எழுதி வந்தார் வருடக்கணக்கில். சேகர் Fu \ J & V-u Ej SWeLs G Zf üNojRJ . (Ggnuoruairá