பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 爱7遭 அவரைப் போற்றிக் காப்பாற்றிய சஞ்சீவி ஓர் அர்ப்பணிப்புடன் தமிழ்ஒளியின் கவிதைகளை நல்லநல்ல பதிப்புகளாக வெளியிட்டு, தமிழ் வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். வ.உ. சிதம்பரம் பிள்ளை அரசியல்வாதியாகவே பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகிறார். அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டுச் சிரமங்கள் பல அனுபவித்தவர்தான். பிரிட்டிஷ் ஆட்சியாளரை எதிர்த்து, பிரிட்டிஷாரின் வணிகத்துக்குப் போட்டியாகக் கப்பல்களை நெடுந்திரைக்கடலில் ஒட்டிக்காட்டிய பெருமை அவருக்கு உண்டு. அவற்றுடன் அவர் தமிழ்மொழியின் பக்தராகவும் இலக்கியவாதியாகவும் வாழ்ந்திருக்கிறார். அவ்ர் செய்யுள் வடிவத்தில் நூல்கள் பல எழுதியிருக்கிறார். வ.உ.சி. அவரது சுயசரிதையையும் செய்யுளிலேயே எழுதியுள்ளார். உரைநடை நூல்கள் பலவற்றையும் எழுதியிருக்கிறார். தமிழ் மக்களின் உடல் அழகும் உள்ளத்தின் அழகும் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் வ.உ.சி. ஆரோக்கியம் மற்றும் பண்பாட்டு உயர்வு பற்றி எல்லாம் சிறுசிறு நூல்கள் எழுதிவெளியிட்டார். சான்றோர் எனச் சிறப்புற்றிருந்த ஆங்கிலேய அறிஞர் ஜேம்ஸ் ஆலன் என்பாரின் அறநூல்களை வ.உ.சி. தமிழாக்கியிருக்கிறார். அவற்றுள், தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய மனம் போல வாழ்வு என்பதும் ஒன்று ஆகும். மேலும், வ.உ.சி. தொல்காப்பியம் நூலையும் இளம்பூரணர் உரையையும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். அவருடைய தமிழ்ப்பணியும் நூல்களும் அறியப்படாமலேயே இருக்கின்றன. பாளையங்கோட்டையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செ. திவான் போற்றுதலுக்கு உரிய பணிகள் பல செய்துகொண்டிருக்கிறார். மறைந்துபோன - மறக்கடிக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை ஆய்ந்து கண்டு. சான்றாதாரங்களோடு அவற்றைப் பதிப்பிக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு அவர் ஈடுபட்டிருக்கிறார். வ.உ.சி. நூல்களையும் தேடி எடுத்து, சிறுசிறு வெளியீடுகளாக அவற்றைப் பதிப்பித்து வருகிறார் திவான். இவ்வாறு அர்ப்பணிப்புடன் பாடுபடுகிறவர் எவராவது தோன்றி உழைத்தால் தான், உண்மையான திறமைக்கும் நல்ல படைப்புகளுக்கும் உரிய கவனிப்புக் கிடைக்க வழி பிறக்கும் தமிழ்நாட்டில் கவிஞர்கள் ஏதாவது ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்து கட்சிப்பணிகள் புரிந்து, கட்சித் தலைவரின் அன்பையும் அபிமானத்தையும் பெறமுடிந்தால் பெயரும் புகழும் அடைவது சாத்தியமாகலாம். திரைப்படங்களுக்குப்பாட்டுகள் எழுதிப் பணமும் பெற்று அரசியல் கட்சியினரின் ஆதரவையும் அடைந்தால், அதிக வெற்றிகளைப் பெறமுடியும் என்ற நிலைமையும் இருக்கிறது.