பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 39 நிறைந்திருந்த இந்த இதழ் வெகு காலம் நீடிக்கவில்லை. 8 இதழ்களோடு ஒய்ந்துபோனது. இவ்வாறாகப் பத்திரிகை, புத்தகங்களுடனான எனது அறிமுகம் வளர்ந்து வந்தது. இதயஒலியில் எனது கையெழுத்துப் பத்திரிகையில் நான் எழுதிக்கொண்டிருந்தேன். அவற்றில் எதையும் எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பவில்லை. பிறகு அனுப்பிப் பார்க்கலாமே என்று பிரசண்ட விகடன் இதழுக்கு அனுப்பினேன். பிரசண்ட விகடன் இதழ் நடத்திய நா. முனுசாமி முதலியார்தான் 'ஆனந்த போதினி என்கிற இலக்கிய மாத இதழையும் நடத்தினார். ஆனந்த போதினியில் கம்பராமாயணம் திருக்குறள் பற்றிய கட்டுரைகள், ஓரிரு கதைகள், தொடர்கதை முதலியன வந்தன. ஆனந்த விகடன் பத்திரிகையைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு முன்னர், எஸ்.எஸ். வாசன் ஆனந்த போதினியில் கதைகள், தொடர்கதைகள் எழுதியுள்ளார். ரா.பி. சேதுப்பிள்ளை, தூத்துக்குடி பால் நாடார் போன்றவர்களின் கம்ப ராமாயணக் கட்டுரைகள் இவ்இதழுக்கு மதிப்பு சேர்த்தன. நாரண துரைக்கண்ணன் தான் பிரசண்ட விகடன், ஆனந்த போதினி ஆகிய இரண்டு இதழ்களுக்கும் ஆசிரியர் ஆவார். பிரசண்ட விகடன் இளைய எழுத்தாளர்களின் எழுத்துக்களை வரவேற்றுப் பிரசுரித்தது. பிற்காலத்தில் வளர்ந்து புகழ்பெற்ற அநேகப் படைப்பாளிகளின் சிறுகதைகள் முதன் முதலாகப் பிரசண்ட விகடனில் தான் பிரசுரம் பெற்றன. எனது கதை 'சந்திரகாந்தக் கல்' என்பதும் அதில்தான் வெளிவந்தது. அதீதமான கற்பனை கொண்ட சுமாரான கதை அது. 1939இல் அது வெளியாயிற்று. இதற்கிடையில் நான் அரசு பணியாளனாக ராஜவல்லிபுரம் ஊரை விட்டு வெளியேறியிருந்தேன். 8 என் அப்பா இறந்த பின்னர் எங்கள் குடும்பப் பொருளாதாரம் கனிவுட்ாதையின் சென்று கொண்டிருந்து அப்பா நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததால், மருத்துவ சிகிச்சை செலவு அதிகமாயிற்று. அப்பா இறந்ததும், அதன் பின்னரும், சமூகக் கட்டுப்படி சாவுச்சடங்குகளைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மா ஏராளமாகவே செலவுகள் செய்தார். மாதம்தோறும் மாசியம்' என்று மாதத் திதி மூன்று இலைகள் படைத்து சகல பொருள்களுடனும் பச்சரிசி தாராளமாகவே ஐயர்களுக்கு வழங்குதல் ஆண்டு முடிவில் ஆட்டத் திதி என்று முதல் வருடத் திவசம் பெரும் பணச் செலவில் நிறைவேற்றுதல் போன்ற சடங்குகள். இவற்றுடன் எங்கள் நால்வரின் படிப்புச் செலவுகள்.