பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வாழ்க்கைச் சுவடுகள் விவசாயி மக்களிடையே பணிபுரிய வேண்டும். ஆகவே, அலுவலகத்தில் நான் மட்டும் தான் வேலையும் அதிகம் கிடையாது. அதனால் படிப்பதற்கும். எழுதுவதற்கும் மிக வசதியாக இருந்தது. பல மாதங்களுக்குப் பிறகு அந்த அதிகாரி இடம் மாறுதல் பெற்று திருமங்கலத்துக்கே போய் விட்டார். புதிதாக வந்தவர் இளைஞர், நல்லவராக இருந்தார். ஆறேழு மாதங்களில் அவரும் வேறு ஊருக்கு மாற்றப்பட்டார். அடுத்து வந்தவர் ஒரு மலையாளி. அவரும் நல்ல மனிதர் தான். பரமக்குடியில் நான் இரண்டு வருடங்கள் பணி புரிந்தேன். மனோகரமாகக் காலம் கழிந்தது. ஆற்றில் தண்ணீர் ஓட்டம் இல்லாத காலங்களில், மணலில் ஒடுகால்' என்று பள்ளங்கள் தோண்டிக் குளிப்பதற்கு வசதி செய்திருப்பார்கள். மூன்று பெரிய குழிகள் தள்ளித் தள்ளி வெட்டப்பட்டிருக்கும். இடையே 'கால்கள் வெட்டப்பட்டு அவை இணைக்கப் பெற்றிருக்கும். குழிகளில் ஊற்றுப் பெருக்கினால் தண்ணீர் நிறைந்து கிடக்கும். முதல் பள்ளத்தில் துணி அலசுதல் முதலிய அலுவல்களை முடிக்க வேண்டும். இரண்டாவது பள்ளத்தில் உட்கார்ந்து நீராடுதல் அழுக்குத் தேய்த்துக் குளிப்பதெல்லாம் இங்கு தான். அடுத்து மூன்றாவது பள்ளத்தில் கிடக்கும் சுத்தமான நீரில் இரண்டு முங்கு போட்டு விட்டுக் கரையேறி விட வேண்டும். பரோபகார குணம் உடைய பெரியவர்கள், பள்ளங்கள் அழுக்குப் படியாதவாறு கவனித்துக் கொள்வார்கள். அவ்வப்போது, கிடங்குகளில் இருந்து தண்ணீரை இறைத்து வெளியே ஊற்றிப் புதுநீர் ஊறும்படி செய்வார்கள். இரண்டாவது பள்ளத்தில் துணிகளைத் தோய்க்காதவாறும், மூன்றாவது குழியில் அதிக நேரம் குளித்துத் தண்ணீரைக் களங்கப்படுத்தாதவாறும் கண்காணித்துக் கொள்வார்கள். இந்தப் பொதுநலப் பணிக்காக, ஒடுகாலைப் பயன்படுத்துகிறவர்கள் காலணா. அரையனா வழங்குவதும் உண்டு. கரை மீது அதற்கென அமைக்கப்பட்ட இடத்தில் அவர்களாகவே காசுகளைப் போட்டு விட்டுப் போவார்கள். கட்டாயம் காசு தர வேண்டும் என்ற கண்டிப்பு எதுவும் இருந்ததில்லை. ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள். ஒரு அணாவுக்கு 12பைசா. ஒரு பைசா தம்பிடி என்றும் கூறப்பட்டது. 2 அனாவுக்கு அரைக்கால் ரூபா என்ற சிறிய வட்ட வடிவ வெள்ளிக்காசும் உண்டு.) மாலை நேரங்களில் நான் ஆற்று மணலில் மேற்கு நோக்கி இரண்டு மைலுக்கும் அதிகமாகவே நடந்து சென்று திரும்புவேன். பரந்த மணல் வெளி. பனை மரங்கள் செறிந்த பிரதேசம். சில சமயம் நரிகள் ஒன்றிரண்டு