பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் سمي. 10 திருநெல்வேவியின் அமைதியாக நாட்கள் ஓடின. என் அண்ணா கோமதிநாயகம் அங்குள்ள தி மெடிக்கல் ஸ்டோஸ் எனும் மருந்துக்கடையின் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அரசடிப்பாவத் தெருவின் ஒரு விதி வாடகைக்கு அமர்த்தி அன்னா அம்மா தம்பி முருகேசன் வசித்து வந்தார்கள். பெரிய அன்னாச்சி கலியாணசுந்தரத்துக்குத் திருமணமாகி ஒரு குழந்தை பிறந்திருந்தது. அவர் முனிசிபல் பஸ் நிலையத்தின் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தார். அவர் மாமனார் விட்டிலேயே தங்கியிருந்தார் அரசடிப்பாலத் தெரு வீட்டில் நானும் சேர்ந்து கொண்டேன். படிப்பும் எழுத்தும் என் முழுநேர வேலை ஆயின. உற்சாகமாக எழுதுவதற்காக நான் திரும்பவும் இதயஒலி' என்கிற கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கினேன். அதன் பக்கங்கள் முழுவதிலும் என் எழுத்துக்கள் மட்டுமே இடம் பெற்றன. அதற்காக மேலும் பல புனைபெயர்கள் - நையாண்டி பாரதி, கோரநாதன், மிவாஸ்கி, சொனா.முனா, பிள்ளையார் முதலியன சூடிக்கொண்டேன். என் கதைகள் பல பத்திரிகைகளிலும் வரத்தொடங்கின. சக்திதாசனின் நவசக்தி'யில் மாதம்தோறும் என் சிறுகதை வெளியாயிற்று. 'கலைமகள்' இதழிலும் வந்தன. புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா, க.நா. சுப்ரமண்யம், ந. சிதம்பரசுப்ரமண்யன் முதலிய, பிரசித்தி பெற்ற 'மணிக்கொடி எழுத்தாளர்கள் கதைகள் அக்கால கட்டத்தில் 'கலைமகளில் வெளியாயின. அவர்களது எழுத்துக்களோடு என் கதைகளும் இடம் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது. பெருமையாகவும் இருந்தது. - அப்போது நான் உருவகக் கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். ஆஸ்கார் ஒயில்ட் எனும் ஆங்கில எழுத்தாளர் ப்ரோஸ் போயம்ஸ் என்ற பெயரில் சின்னச் சின்னக் கதைகள் எழுதிப் பெயர் பெற்றிருந்தார். இவான் துர்கனேவ் என்கிற ரஷ்ய எழுத்தாளரும் அப்படிப்பட்ட ப்ரோல் போயம்ஸ் எழுதியிருந்தார். அழகான நடையில், தத்துவ நோக்கில், வாழ்க்கை இயல்புகளை எடுத்துக் கூறும் குட்டிக் கதைகள். ஒரு பக்கத்திற்குள் அடங்கிவிடும். அத்தகைய தத்துவக் கதைகள் நல்ல கவனிப்பைப் பெற்றன. இச் சந்தர்ப்பத்தில் நெல்லை வாலிபர்கள் பலரின் அறிமுகம் எனக்குக் கிட்டியது. இளைஞர்கள் பலர் சேர்ந்து நெல்லை வாலிபர் சங்கம் அமைத்திருந்தார்கள். திருநெல்வேலி சம்பந்தர் தெருவில் ஒரு வீட்டின்