பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 57 கதை. அதற்குப் பரிசுத் தொகை நூறு ரூபாய் வந்தது. அந்தக் காலத்தில் அது பெரிய தொகைதான். அதன் பிறகு இந்திரா இதழ் தோறும் எனது கதைகளைப் பிரசுரம் செய்தது. ஆனால் பணம் எதுவும் தரவில்லை. அவ்வப்போது என் கதைகளை வெளியிட்ட கலைமகள்கூட எனக்குப் பணம் தந்ததில்லை. புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், ந. பிக்சமூர்த்தி போன்ற பெரிய எழுத்தாளர்களுக்கு மட்டும் கலைமகள் சன்மானம் அளித்துவந்தது. கதைக்குப் பதினைந்து ரூபாய், நான் எழுத்துத் துறையில் வளர்ச்சி பெற வேண்டும் என்ற ஊக்கத்தோடு எழுதிக் கொண்டிருந்தேன். அதனால் பத்திரிகைகள் பலவும் விரும்பி என் எழுத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்தது எனக்கு உற்சாகம் அளித்து வந்தது. என் எழுத்துகளுக்குப் பத்திரிகைகள் பணம் தர வேண்டும் என நான் எண்ணவுமில்லை எதிர்பார்த்ததும் இல்லை. மாதங்கள் மகிழ்ச்சிகரமாகப் போய்க்கொண்டிருந்தன. படிப்பதற்கு நல்ல பத்திரிகைகளும் புத்தகங்களும் கிடைத்தன. திருநெல்வேலி முனிசிபல் நூல்நிலையத்தில் நல்ல ஆங்கிலப் புத்தகங்களும் இருந்தன. பெர்னாட்ஷா நாடகங்கள் அதிகம் இருந்தன. அண்ணா கோமதிநாயகம் படிப்பதற்காக அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்தார். தமிழ்ப் புத்தகங்களை நாங்கள் விலைக்கு வாங்கினோம். மொழிபெயர்ப்பு நாவல்கள் வேகமாக வெளிவந்து விற்பனையாயின. பங்கிம் சந்திரரின் 'ஆனந்த மடம்', 'விஷவிருட்சம்' மற்றும் தேவி செளது ராணி, ராஜபுத்திர ஆதிக்கத்தின் அஸ்தமனம் போன்ற நாவல்களின் தமிழாக்கங்கள் புத்தகங்களாகவே வெளிவந்தன. 'கலைமகள் பிரேம் சந்த் நாவல்களைத் தொடர்கதையாக வெளியிட்டது. பங்கிம் சந்திரரின் 'அக்கினி' நாவலைத் தொடர்ந்து பிரசுரித்தது. ஆனந்த விகடன் 'சேவா சதனம்' நாவலை வெளியிட்டு வந்தது. அந்தச் சமயத்தில்தான் வி.ஸ். காண்டேகர் எனும் மராத்தி எழுத்தாளரின் நாவல்கள் தமிழில் அறிமுகமாயின. வெறும் கோயில்’ புத்தகமாகவே வெளிவந்தது. காண்டேகரின் எழுத்தாற்றலும், கதைப் போக்கும். கா.பூரீ.ரீ.யின் திறமையான தமிழாக்கமும் அந்த நாவலுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தன. தொடர்ந்து பிரசுரம் பெற்ற காண்டேகர் நாவல்கள் 'சுகம் எங்கே?', 'எரி நட்சத்திரம் முதலியனவும் தமிழ் வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தன. தொடர்ந்து வந்த கருகிய மொட்டு பரபரப்பான கவனிப்பைப் பெற்றது. தமிழ்ப் பத்திரிகைகள் காண்டேகர் நாவல்களைத் தொடர்கதைகளாகப் பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டின.