பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வாழ்க்கைச் சுவடுகள் நினைத்தடி முக்கிய வாசலின் அருகிலேயே நின்றேன். சந்தர்ப்ப சகாயம்' என்பார்களே. அதுபோல் காலத்தின் உதவி எனக்குக் கிட்டியது. கோபால் சைக்கிளில் வந்தார். வாசல் அருகில் நின்ற என்னைப் பார்த்ததும், சிரித்தபடி இறங்கினார். என்ன, இங்கே நிற்கிறே? எப்ப வந்தே? என்று கேட்டார். அவரிடம் ஒரு கதை அளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது பத்திரிகை அலுவலகத்தில் வேலை விஷயமாக மதுரைக்கு வந்தேன். நேற்று வந்தேன். கொண்டு வந்த பணம் தீர்ந்து போச்சு ஊருக்குப் போகணும்; ரூபாய் வேண்டும் என்றேன். - அவர் சிறிது யோசித்தார். கைக்கடியாரத்தைப் பார்த்தார். இப்ப மணி பத்தரை ஆகுது. இங்கே பக்கத்திலே ஒட்டல் எதுவும் கிடையாது. நீ மதுரைக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டுப் பன்னிரண்டரை மணிக்கு வா. இன்று என் கூட ரூமில் தங்கிவிட்டு நாளைக்குப் போகலாம் என்று சொல்லி ஒரு ரூபாய் கொடுத்தார். நேரமாச்சு நான் போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். நான் மதுரை நோக்கி நடந்தேன். டவுன்ஹால் ரோடில் ஒரு ஒட்டலில் இட்டிலி, தோசை, காப்பி சாப்பிட்டேன். அந்நாட்களில் உணவுப் பொருள்களின் விலை மிகவும் குறைவு. ஒரு ரூபாய்க்குள் வயிறார உணவு சாப்பிட முடியும். திரும்பவும் கோபாலைச் சந்திப்பதற்கு நேரம் இருந்ததால் நான் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் அங்கு ஒய்வாகத் தங்கினேன். அங்கே சுவரில் ரயில்வே ஸ்டேஷன்கள், கட்டணங்கள் விவரம் அச்சிட்ட பெரிய நோட்டீஸ் காணப்பட்டது. அதில் காரைக்குடிக்கு எவ்வளவு கட்டணம் என்று பார்த்தேன். மூன்று ரூபாய் தான். அக்காலத்தில் ரயில் பயணக்கட்டணங்களும் மிகக்குறைவுதான். திருநெல்வேலியிலிருந்து சென்னை எழும்பூருக்குக் கட்டணம் எட்டே ரூபாய் தான். இப்போது நூற்று எண்பது ரூபாய் உரிய நேரத்தில் கோபாலின் பயிற்சி நிலையம் சென்று அவருக்காக வெளியே காத்து நின்றேன். அவர் வந்ததும், சாப்பிட்டாயா? என்று அன்பாக விசாரித்தார். 'வா, டோவோம். நான் இருக்கிற இடம் பக்கத்திலே தான் இருக்கு என்று அழைத்துப் போனார். அது பல அறைகள் கொண்ட அமைதியான கட்டிடம். இனிய சூழல் அறைக்கு ஒருவராகப் பல பயிற்சி மாணவர்கள் அங்குத் தங்கியிருந்தார்கள். ஒரு உணவு விடுதியில் இருந்து அவர்களுக்குச் சாப்பாடு ஒவ்வொரு வேளையும் வந்தது. அன்று அவரோடு உணவு உண்டு இரவு அங்கேயே தங்கினேன். அவரும் பக்கத்து அறை நண்பர்களும் அவரவர் சிரமங்களைப் பற்றிப்