பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைச் சுவடுகள் இந்தக் குறுக்கு விசாரணை எனக்குச் சில உண்மைகளைப் புரிய 袋莎线 கண்ணகி- மாதவி விவகாரம் போலிருக்கு. செட்டியார்மீது மனைவிக்கு நம்பிக்கையில்லை. அவர் தமது ஆசைநாயகியை ஆபீசில் |க்கிறார் என்ற சந்தேகம் அம்மாளுக்கு அதனால் தான் இந்த விசாரிப்பு புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள கோகர்ணத்தில் தாசிகள் அதிகம், அந்த வகையில் பிரசித்தமான இடம் அது என்று மருதப்பர் பேச்சோடு பேச்சாக அறிவித்திருந்ததும் நினைவுக்கு வந்தது. திருமகள் அலுவலகத்துக்கு அ. ராமாமிர்தம் என்று ஓர் எழுத்தாளர் வருவார். வறுமை நிலையை அவர் தோற்றமே சொல்லும், நல்ல எழுத்துத் திறமை உடையவர். தமக்கென ஒரு தனிநடை கொண்டு சிந்தனைக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார். புதுக்கோட்டையில் இருந்த காகித விற்பனைக் கடை ஒன்றில் அவர் வேலை பார்த்தார். அரா. என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தார். மறுநாள் வந்த அவர் என்ன, ராத்திரி ஆச்சி உங்களிடம் விசாரணை நடத்தினார்களாமே? என்று கேட்டார். ஆச்சியின் வேலையாள் இவரிடம் சொல்லியிருக்க வேண்டும். நான் நடந்ததைச் சொன்னேன். 'செட்டியார் கோவலன் டைப் அவர் விவகாரங்கள் ஆச்சிக்குத் தெரியும் சொத்து பணமெல்லாம் ஆச்சிகிட்டே தான் இருக்கு பத்திரிகை நடத்துவதற்குக் கூட ஆச்சி பணம் தந்தால்தான் உண்டு. அதனாலேதான் திருமகள் காலம் தவறாமல் வரமுடிவதில்லை என்று அரா, விளக்கினார். பத்து மணிக்கு இராம. மருதப்பர் வந்தார். வந்ததுமே. 'ராத்திரி ஆச்சி உங்களைக் கூப்பிட்டு விசாரிச்சாங்களா?' என்று கேட்டார். இதுபோன்ற விஷயங்கள் என்னமா இறக்கை கட்டிப் பறந்து நெடுகப் பரவிவிடுகிறது என்ற வியப்பு எனக்கு. ஆச்சிக்குச் செட்டியார் பேரில் நம்பிக்கையில்லை. பணம் சொத்து எல்லாம் ஆச்சி பேரில்தான் இருக்கிறது. செலவுக்குப் பணம் எல்லாம் ஆச்சி கொடுத்துத் தான் செட்டியாருக்கு வர வேண்டும். லாபம் இல்லாத தொழிலாய் இந்தப் பத்திரிகையை ஏன் நடத்த வேண்டும் என்ற எண்ணம் ஆச்சிக்கு. அதனால் தான் திருமகள் காலம் தவறாமல் வரமுடியவில்லை என்று மருதப்பர் தெரிவித்தார். நான் அங்குச் சேர்ந்த சமயம் திருமகள் ஜனவரி இதழ் வெளிவந்திருந்தது. பிப்ரவரி இதழ் தயாராக வேண்டும். சில பக்கங்கள் அச்சுக் கோக்கப்பட்டிருந்தன. அவற்றின் புரூஃப் களை நான் திருத்தினேன். வேற சில விஷயங்கள் தேர்வு செய்யப்பட்டுக் காத்திருந்தன. அச்சடிக்கத் தாள் வாங்க வேண்டும். அது தள்ளிப்போடப்பட்டு வந்தது.