பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ァ எழுதினால் இந்திய விடுதலைக்கு முன்பும் பின்பும் தோன்றிய இதழ்கள் அனைத்திலும் பெரும்பாலும் இவர் எழுத்து இடம் பெற்று விளங்குவதைக் காணமுடியும். எழுத்தின்மேல் இவர் கொண்ட தாகம் இன்றும் தணியவில்லை என்றே கூறலாம். எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் வாழ்க்கைச் சுவடுகள் நூலால் தமிழ்நாட்டின் இலக்கிய, மொழி, சமுதாய, வரலாற்றுச் செய்திகள் தெளிவாகின்றன. இதழியல் நடத்துவதில் ஏற்பட்ட இன்னல்கள், அவ்வின்னல்களையே இன்பமாக நினைந்து வாழ்ந்த எழுத்தாளர்கள், இதழாசிரியர்கள் ஆகியோரின் வாழ்க்கைச் சுவடுகளும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக, கட்டுரையாளராக, திறனாய்வாளராக, மொழிபெயர்ப்பாளராக வல்லிக்கண்ணன் விளங்குகின்றார். எழுத்தாளர்களுள் பலரும் அவரை ஏற்றிப் போற்றுவதை அண்மையில் வெளியாகிய சிறியன சிந்தியாதான் என்னும் நூல் காட்டும். அவர் இன்றும் மிகமிக எளிமையாக வாழ்ந்து வரும் ஞானியாகக் காட்சியளிக்கின்றார். எழுத்திற்கே முதன்மைதந்து ஏனைய அனைத்தையும் புறந்தள்ளிய ஆன்மிகவாதியாக வலம் வருகின்றார் வல்லிக்கண்ணன். அரசுப்பணி எழுத்துப்பணிக்குத் தடையாயிருப்பதை எண்ணி அரசுப்பணியையே உதறியவர். அந்நிகழ்ச்சி குறித்து அவர் எழுதுவது அவருடைய உறுதியான உள்ளப் பாங்கைக் காட்டும். நான் அப்படி வேலையை விட்டு உதறிவந்தது என் உறவினர்களுக்குப் பிடிக்கவில்லை. முக்கியமாக எனக்கு வேலை வாங்கித் தந்த பெரியவர் என் போக்கை வெறுத்தார். சொந்தக்காரர் ஒருவர் உபதேசம் புரிந்தார். நீ வேலையை விட்டது தப்பு. நீ எல்லாம் எழுதி முன்னுக்கு வர முடியாது; ஒரு வேலையில் இருந்து கொண்டு உன் மனத் திருப்திக்காக எழுதலாம். ஆபீஸ் வேலை பிடிக்கவில்லை என்றால் சின்னதாக ஒரு கடை வைத்துக் கொண்டு பிழைக்க வழிதேடு. கூட உன் விருப்பம் போல் எழுது. பத்திரிகை ஆபீசில் சேர்ந்து முன்னேறிவிடலாம் என நினைப்பது வெறும் கனவுதான். நம்மைப் போன்றவங்களாலே சொந்தமாகப் பத்திரிகை நடத்தி உயரவும் முடியாது. அதுக்கு நிறையப் பணம் வேனும் என்று நீண்ட நேரம் பேசினார். இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்ட பின்னர் வல்லிக்கண்ணன் இறுதியில் குறிப்பிடுவார்: 'எவருடைய நல்லுரையையும் கேட்கும் நிலையில் நான் இருக்கவில்லை. என் உள்ளத்தில் ஒரு உறுதிபடிந்திருந்தது. நான் எப்படியும் எழுத்தாளனாக வளர்ந்தே தீர்வேன் என்று. ஆம். அவருடைய உள்ள உறுதி நிலைத்தது. வாழ்வில் எதை எண்ணி, எதைநோக்கி