பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 81 இடத்தில் அடுத்துத் துணைஆசிரியர்-வல்லிக்கண்ணன் என்று அவராகவே அச்சிடச் செய்தார். - பொருளாதார பலமின்றி, சிறு அளவில் நடைபெறும் பத்திரிகைகளில் உதவி ஆசிரியர்- துணை ஆசிரியர் என்ற பெயரில் உழைக்கிறவர்கள் பத்திரிகை சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் செய்கிற நபர்களாகத் தான் இருப்பார்கள். தபால்களைக் கவனிப்பது பத்திரிகைகளை அனுப்புவதற்கான பலதரப்பட்ட வேலைகளையும் செய்வது புரூஃப் பார்ப்பது. பத்திரிகைக்குத் தேவையான பல்வேறு மேட்டர்களையும் எழுதுவது - இப்படி ஏகப்பட்ட வேலைகள் செய்தாக வேண்டும். சினிமா உலகம் சம்பந்தப்பட்ட கணக்குகளை எழுதுவதற்கு ஓர் அன்டர் (ஒரு தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்) உதவினார். அதற்காக ஏதோ சன்மானம் பெற்று வந்தார். ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதி, டைப் செய்து உரிய இடங்களுக்கு அனுப்புகிற பணியை வேறு ஒருவர் பகுதி நேர வேலையாக ஏற்று, செய்து கொண்டிருந்தார். நான் வந்த பிறகு, அவ்வேலைகளையும் நானே செய்ய முடியும் என்பதால், செட்டியார் அவ்விரு அன்பர்களையும் நிறுத்திவிட்டு அப்பொறுப்புகளையும் என்னிடம் ஒப்படைத்தார். எனக்குச் சம்பளம் என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சாப்பாடு ஒட்டலில், தங்குமிடம் வீட்டில் அவசியச் செலவுக்குத் தேவைப்படுகிற பணத்தை அவ்வப்போது கேட்டுவாங்கிக் கொள்ளலாம் என்ற நிலைமை. அது திருப்திகரமாகத்தான் இருந்தது எனக்கு. ஸ்டுடியோக்களுக்குப் போவது, படஉலகம் சம்பந்தப்பட்ட நபர்களைச் சந்திப்பது விழா விசேஷம் என்று வரும் நிகழ்ச்சிகளுக்குச் செல்வது முதலியவைகளைச் செட்டியாரே கவனித்துக் கொண்டார். இவ் வட்டாரங்களில் நான் அறிமுகமாக வேண்டும், பழகி முன்னேற வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்ததில்லை. அப்படி விருப்பம் இருந்திருந்தாலும் ஆசிரியர் உதவியிருக்கமாட்டார் என்றே எண்ணத் தோன்றியது. - பத்திரிகை தொடர்பான சிறுசிறு வேலைகள், வெளி உலக அலுவல்களைச் செட்டியாரின் உறவினரான எஸ்.பி. கிருஷ்ணன் என்ற இளைஞர் கவனித்துக் கொண்டார். அவரும் அக்குடும்பத்தில் ஒருவராகத்தான் வசித்தார். இச் சந்தர்ப்பத்தில் டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபை பாலக்காடு ஊரில் முகாமிட்டு நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தது. அங்குப் போய் நாடக நால்வரைப் பேட்டி காணவும். விளம்பரம் பெற்று வரவும் செட்டியார்