பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ8 - வாழ்க்கைச் சுவடுகள் கு.ப.ரா. தமக்கிருந்த இலக்கிய ஆர்வத்தினாலும் உற்சாகத்தாலும், தமது பத்திரிகைப் பணிக்குச் சன்மானம் தேவையில்லை, பணம் எதுவும் தரவேண்டாம் என்று கூறினார். துறையூருக்கு வராமல், கும்பகோணத்தில் இருந்தபடியே கதை, கட்டுன் என்று பத்திரிகை விஷயங்கள் அனுப்பினார். மற்றும் சிலரிடமிருந்தும் படைப்புகள் பெற்று ஊழியனுக்கு அனுப்பி வந்தார். அவர் வேண்டாம் என்று பெரிய மனசுடன் பணத்தை மறுத்தபோதிலும் பத்திரிகை நிர்வாகம் அவருக்கு மாதம்தோறும் ஐம்பது ரூபாய் அனுப்பி உதவியது. ஆறு மாதங்களுக்குப் பிறகு கு.ப.ரா. பெயரை 'ஆசிரியர்' என்று வெளியிட்டு மாதாமாதம் நூறு ருபாய் வழங்கியது. o - - - - * { • 3 - அந்நிலையில்தான் குபரா. எழுத்தாளர்களிடம் விஷயதானம் பெறவும் திருலோகம் விளம்பரங்கள் சேகரிக்கவும் சென்னைக்கு வந்தார்கள். இவர்கள் வந்த பிறகுதான் சக்திதாசன் சுப்பிரமணியம் இலங்கை சென்றார். இவ்விவரங்கள் அனைத்தையும் திருலோகம் எனக்குச் சொன்னார். கிராம ஊழியனை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும். அதற்கு நீங்கள் துறையூருக்கு வந்தால் உதவியாக இருக்கும். நவசக்தி பொருளாதாரபலம் இல்லாது சிரமப்படுகிறது. பணம் சேகரித்து வருவதற்காகத் தான் சத்திதாசன் இலங்கை போயிருக்கிறார். ஓரளவு நிதி அவருக்கக் கிடைக்கவும் கூடும். ஆனால் அதை வைத்துக் கொண்டு எத்தனைக் காலத்துக்கு அவர் பத்திரிகை நடத்த முடியும்?' என்று திருலோகம் கேட்டார். சக்திதாசனும், ராதாமணியும், அவளுடைய சகோதரிகளும் சாலைத் தெருவில் வசதியான வீட்டில் வசிக்கிறார்கள் என்றும் திருலோகம் தெரிவித்தார். கே. ராமநாதன்தான் இப்போது நவசக்தி'யைக் கவனித்துக்கொள்கிறார். ராமநாதனின் இலக்கிய நோக்கே வேறு என்றும் அவர் கூறினார், நவசக்தி திருவி. கல்யாணசுந்தரனாரின் பத்திரிகையாக நெடுங்காலம் வளர்ந்தது. ஒரு காலத்தில் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி வெ.சாமிநாத சர்மா முதலியவர்கள் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளனர். பின்னர், அதன் இறுதிக்கட்டத்தில் கே. ராமநாதன், சக்திதாசன் சுப்பிரமணியம் முதலியோர் உதவி ஆசிரியர்களாக உழைத்தார்கள். ஒரு கட்டத்தில் ராமநாதன் இலங்கை போய்விட்டார். அங்கு அவர் தேசாபிமானி என்ற பத்திரிகைப் பணியில் ஈடுபட்டதுடன் தொழிலாளர் நலனுக்காகத் தீவிரமாகப் பாடுபடவும் செய்தார். அங்குள்ள அரசு அவரைக் கண்காணித்து வந்தது. அவர் கைது ஆகக்கூடிய நிலை ஏற்பட்டதும் அவர் தமிழகம் வந்துவிட்டார். திருவிக முதுமை காரணமாக நவசக்தியை வளர்க்க இயலாத நிலை ஏற்பட்டது. 'கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி நவசக்தியை ஏற்று நடத்த விரும்பினார் என்றும் ஆனாலும் இறுதிக்கட்டத்தில் நவசக்திக்காகச் சிரமங்களோடு