பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வாழ்க்கைச் சுவடுகள் இராஜவல்லிபுரத்திலிருந்து புறப்பட்டாரோ அதனை அவர் இறுதியில் தம் கடும் உழைப்பால் அடைந்து வெற்றி பெற்றார். ஆனால் அதை அவர் பெறுவதற்கு இடையே பல நிலைகளைக் கடந்து வர வேண்டியிருந்தது. அப் படிநிலைகளையெல்லாம் உறுதியாக நின்று வெற்றிகண்டார் வல்விக்கண்ணன். அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் (67) என்னும் குறள் மொழிக்கேற்ப முயற்சியாலும் கடுமையான உழைப்பாலும் பெருமை பெற்றவர் வல்லிக்கண்ணன். ‘வாழ்க்கைச் சுவடுகள்’ என்னும் இந்நூலில் வல்லிக்கண்ணன் அவர்கள் அக்காலத்தில் நிகழ்ந்த பல்வேறு சுவையான நிகழ்ச்சிகளையும் பதிவு செய்துள்ளார். காசித்தேவன் என்ற கொள்ளைக்காரன், ராபின்ஹீட் என்னும் ஆங்கிலேய கொள்ளைக்காரன் போல் வாழ்ந்து, பெருமை பெற்ற செய்தியையும் போலீசாரால் கைவிலங்கு மாட்டப் பெற்ற நிலையில் அவனைத் தாம் பார்த்தபோது மெலிந்த அவனுடைய தோற்றம் தமக்கு ஏமாற்றம் தந்ததையும சுவையாகக் குறிப்பிடுகின்றார். அதுபோலவே 'கோட்டைப் பிள்ளைமார் பெண்கள் பற்றிய விவரமும் அக்காலத்திய சமூகச் சூழலை வெளிப்படுத்தும். - - புகழ்பெற்ற மணிக்கொடி எழுத்தாளர்களின் கதைகளோடு (புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா, க.நா. சுப்ரமணியம்) அவருடைய கதைகளும் இதழ்களில் வெளியானது கண்டு தம் மகிழ்வைப் புலப்படுத்துவார். நையாண்டிபாரதி, கோரநாதன், மிவாஸ்கி, சொனாமுனா, பிள்ளையார் எனப் பல்வேறு புனைபெயர்களில் எழுதியவர் வல்லிக்கண்ணன். தாமும் தம் நண்பர்களும் கொண்டிருந்த தமிழ்ப்பற்றையும் வல்விக்கண்ணன் தம் எழுத்தில் நினைவுகூர்கிறார். சொல்லின் செல்வர் இரா.பி. சேதுப்பிள்ளை (இவரும் வல்லிக்கண்ணன் பிறந்த ஊரைச் சார்ந்தவரே) 1941 ஆம் ஆண்டில் நெல்லையில் நடந்த விழாவில் பங்கேற்றார். அழைப்பிதழில் பேச்செல்லாம் தமிழினிலே பேசுங்கள்; ஏச் செல்லாம் தமிழினிலே ஏசுங்கள் என்று குறிப்பிட்டிருந்ததைச் சொல்லின் செல்வர் மகிழ்ந்து பாராட்டியதைக் குறிப்பிடுவார். அக்காலத்திய தமிழ்ப்பற்றும் மொழிச் சூழலும் இதனால் புலனாகும். பாரதியார், பாரதிதாசன், பு துமைப்பித்தன் ஆகியோர் வல்லிக்கண்ணனின் படைப்பு ஆளுமைத்திறத்திற்கு உந்துதலாக விளங்கியது போலவே பிறநாட்டு அறிஞர்களின் படைப்புகளும் இவர்தம் எழுத்திற்குப் பொலிவூட்டின. எப்பொழுதும் படித்துக் கொண்டே இருக்கும்