பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 9i கிடைத்த லாபமே அதிகம். அதைக் கொண்டு ஒவ்வொரு வருடமும் ஒரு வீடு வாங்கினார். புதிய ஆண்டில் பஞ்சாங்கம் அச்சடிக்கத் தொடங்கியதுமே, அந்த ஆண்டு எந்த வீட்டை விலைக்கு வாங்குவது என்று அவர் முடிவு செய்து விடுவார் என்று அவரைப் பற்றி நாரணதுரைக்கண்ணன் ஒரு சமயம் குறிப்பிட்டார். நாரணதுரைக்கண்ணன் முதல் சந்திப்பிலிருந்தே என்னிடம் அன்பும் பிரியமும் காட்டலானார். அவ்வப்போது ஆபீசுக்கு வந்து போய்க் கொண்டிருங்கள் என்றார். - பிராட்வேயை ஒட்டிய ஒரு தெருவில் இருந்து தமிழ் மணி'என்ற வாரப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. ஆல்பின் பர்னாண்டோ ஆசிரியர். 'தினமணி நாளிதழை இரண்டாக மடித்த அளவில் அமைந்திருந்த அந்தப் பத்திரிகையின் பதினாறு பக்கங்களையும் அவரே நிரப்பிவிடுவார்.அவர் ஒரு தொடர்கதை எழுதிவந்தார். முடிவற்று வருடக் கணக்கில் வளர்ந்து கொண்டிருந்த மிக நீண்டகதை அது மணிஓசை என்றொரு பகுதி ஒரு பக்கம் முழுவதும் வரும் பலருக்கும் எழுதப்பட்ட பகிரங்கக் கடிதங்கள் அதில் நிறைந்திருக்கும். ஒவ்வொரு கடிதத்தையும் எழுதியவர் பெயர் டிங் டாங்' என்று இருக்கும் விறுவிறுப்பான அரசியல் விஷயங்களைக் கொண்ட இதழ் அது. - அங்குப் பணிபுரிந்த விஸ்வநாதன் என்பவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் திருலோகம். இந்த விஸ்வநாதன் பின்னர் கீமர் அன் கோ' என்கிற விளம்பர ஏஜன்சி'அட்வர்டைஸ்மென்ட் கன்சல்டன்ட்ஸ்' நிறுவனத்தில் இணைந்து கொண்டார் சென்னையில் இருந்த முக்கியமான விளம்பர ஏஜன்சிகளுக்கும் போய் வந்தோம். அந்நிறுவனங்களில் முக்கியப் பொறுப்பில் இருந்த பிரமுகர்களைப் பின்னர் அவரவர் வீட்டில் போய்க் கண்டு பேசினோம். கிராம ஊழியன் பொங்கல் ഥജു விளம்பரங்கள் கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தான். - மலருக்குக் கதை, கட்டுரை கேட்பதற்காகவும் எழுத்தாளர்கள் வீடு தேடிச் சென்றோம். மாலை வேளை, முன்னிரவு என்று. பகலில் சிலர் எங்காவது அலுவலகம் போயிருக்கக்கூடுமே கி.வா. ஜகந்நாதன் வீட்டுக்கு இரவில்தான் போனோம். அவர் அன்டாக உபசரித்தார். இரவு உணவை அவருடன் நாங்களும் சாப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்நாட்களில் நாடோடிப் பாடல்கள் சேகரிப்பது ஒரு புதுப் பழக்கமாகத் தமிழ் நாட்டில் தலைகாட்டியிருந்தது. வடஇந்தியாவில் இருந்து தேவேந்திரநாத் சத்யார்த்தி என்பவர். காளைமாட்டு வண்டியிலேயே நாடு முழுவதும் சுற்றித் திரிந்தார். பல்வேறு